இங்கிலாந்து – லண்டன் நகரத்தில் 14 வயதுச் சிறுவனை பஸ்ஸில் வைத்து கத்தியால் குத்திக்கொலை செய்த குற்றச்சாட்டில் இரு சிறுவர்கள் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளனர் என நகர பொலிஸார் தெரிவித்தனர். 15 மற்றும 16 வயதுடைய சிறுவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்னர் பல கத்திக்குத்துச் சம்பவங்கள் நடந்த வூல்விச் பகுதியிலேயே மேற்படி 14 வயதுச் சிறுவனின் கொலை சம்பவமும் நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்தி : கத்தியால் குத்தப்பட்டு 14 வயது சிறுவன் கொலை
அத்துடன், குறித்த சம்பவம் நடப்பதற்கு முதல் நாள் அன்று, சம்பவ இடத்திற்கு சில கிலோமீட்டர் தூரத்தில் 18 வயதுச் சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு, பலத்த காயங்களுக்கு உள்ளாகியதாக AFP செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 2024ஆம் ஆண்டு லண்டனில் 10 சிறுவர்கள் கத்திக்குத்துத் தாக்குதல்களால் உயிரிழந்துள்ளனர்.
அண்மையில் நீதித்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் 2017ஆம் ஆண்டு, 10 – 17 வயதுக்கு இடைப்பட்ட 27,000 சிறுவர்கள் குண்டர் கும்பல்களில் உறுப்பினர்களாக உள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.