இலங்கையில் தமிழர்களிற்கு பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை உறுதிசெய்வதற்கான முயற்சிகளை தொடர்வோம்-என பிரிட்டனில் நடைபெற்ற தைப்பொங்கல் விழாவில் அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளனர்.
பிரிட்டனின் தமிழ்மக்கள் வெஸ்ட்மினிஸ்டரில் தைப்பொங்கல் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
பரதநாட்டியம் கர்நாடக இசை என தமிழ் மக்களின் கலாச்சார பாரம்பரியத்தினை வெளிப்படுத்தும் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் பிரிட்டனின் அனைத்துகட்சிகளையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் இலங்கையின் வடக்குகிழக்கில் தமிழர்களிற்கு பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை உறுதிசெய்வதற்கான முயற்சிகளில் தொடர்ந்தும் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரிட்டனின் முதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் பிரிட்டனின் சுகாதார துறைஇகல்விஇவர்த்தகம் கலை மற்றும் அரசியல் ஆகியவற்றிற்கு தமிழர்கள் வழங்கியுள்ள பங்களிப்பிற்காக அவர்களிற்கு தனது நன்றியை தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கங்களினால் வேதனைக்கும்துயரத்திற்கும் உட்பட்ட நீண்ட வரலாறு தமிழர்களிற்குள்ளபோதிலும் அவர்கள் லண்டனிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் செழிப்பாக உள்ளனர் என அவர் தெரிவித்தார்.
இலங்கை ஐக்கியநாடுகளின் பொறிமுறைகளை தொடர்ந்தும் நிராகரித்துவருவதால் தமிழ் மக்களிற்கு நீதி மறுக்கப்படுகின்றது என குறிப்பிட்டுள்ள அவர் வெளிவிவகார குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் சமீபத்தில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் என வெளிவிவகார அமைச்சரிற்கு அழுத்தம் கொடுத்ததாக குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிரிட்டனின்சுகாதாரம் மற்றும் சமூகநல இராஜாங்க அமைச்சர் வெஸ்ஸ்ரீட்டிங் பிரித்தானியாவின் கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத்திற்கு தமிழ் மக்கள் வழங்கிய பங்களிப்பிற்காக தனது நன்றியை தெரிவித்தார்.
தமிழ் மக்கள் தமிழ் இனப்படுகொலைக்கு நீதி உண்மை பொறுப்புக்கூறல் நிலைநாட்டப்படுவதை உறுதி செய்வதுகுறித்து அர்ப்பணிப்புடன் உள்ளனர் என தெரிவித்தார்.
நான் இலங்கையின் அனைத்து மக்களினதும் நல்லிணக்கம்இஉண்மை நீதிக்காக எனது குரலை பயன்படுத்த முனைந்துள்ளேன் என அவர் தெரிவித்தார்.
உங்கள் பரப்புரையும் இபிரச்சாரங்களும் பிரிட்டனின் நாடாளுமன்றத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலிலும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையிலும் இலங்கையின் மனித உரிமை விவகாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவியுள்ளது என குறிப்பிட்ட அவர் இங்கெல்லாம் எங்களின் கட்சிகளின் உறுப்பினர்கள் இலங்கையின் மனித உரிமைக்காக குரல்கொடுத்துள்ளனர்- யுத்த காலத்தில் மிக மோசமான அநீதிகளை இழைத்தவர்களை பொறுப்புக்கூறலில் ஈடுபடுத்தவேண்டும் என்பதற்காக குரல்;கொடுத்துள்ளனர் என வெஸ்ஸ்ரீட்டிங் தெரிவித்தார்.
தமிழ்மக்களின் கடும் உழைப்பு மற்றும் குடும்பவாழ்க்கைக்காக பிரிட்டனில் பெரிதும் வரவேற்கப்படுகின்றனர் என பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் இயன் டங்கன் ஸ்மித் தெரிவித்தார்.
மக்னிட்ஸ்கி தடைகளிற்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் சமூகத்தை அச்சத்திற்குட்படுத்தியஇதுஸ்பிரயோகங்கள் கொலைகளில் ஈடுபட்ட அனைவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்போகின்றோம்இஅவர்களிற்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்குமாறு தடைகளை விதிக்குமாறு ஒவ்வொருநாளும் நாங்கள் அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்கப்போகின்றோம்இஎன தெரிவித்தார்.
தைப்பொங்கல் கொண்டாடுவதற்கான ஒரு தருணம் மாத்திரமில்லை இலங்கையி;ல் சமாதானம் நீதிக்காக தொடரும் போராட்டங்களை நினைவுகூறும் தருணம் என தெரிவித்த பிரிட்டனின் தமிழர்களிற்கான அனைத்துகட்சி நாடாளுமன்ற குழுவின் தலைவர் சியோபைன் மெக்டொனாக் எங்கள் சகாக்கள் கனடா அமெரிக்கா செய்தது போன்று பிரிட்டனும் சுதந்திரமாக திரியும் யுத்த குற்றவாளிகளிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் என தொடர்ந்தும் அழுத்தம் கொடுப்பேன் என தெரிவித்துள்ளார்.