உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸை சந்தித்து பேசினார்.
அரச இல்லமான சாண்ட்ரிங்ஹாமுக்கு நேற்று மாலை 5.25 மணியளவில், இராணுவ ஹெலிகாப்டர் ஊடாக ஜெலென்ஸ்கி சென்றுள்ளார்.
நுழைவாயிலில் மன்னர் சார்லஸ் மற்றும் ஜெலென்ஸ்கியும் கைகுலுக்கிய புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் இடம்பெற்ற மோசமான சந்திப்புக்கு பிறகு, உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, இங்கிலாந்து மன்னர் 3ஆம் சார்லஸை சந்தித்துப் பேசியிருக்கின்றார்.
முன்னதாக, இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மருடனான சந்திப்புக்கு பின்னர், உக்ரைனின் பாதுகாப்புக் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் 2.6 பில்லியன் பவுண்டுகளை கடனாக இங்கிலாந்து அரசு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மன்னருடனான இந்த சந்திப்பு உக்ரைன் மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் எனத் தெரிகின்றது.