இங்கிலாந்தின் சுகாதார சேவையை மேற்பார்வை செய்வதற்கும், நிதி – முன்னுரிமைகளை ஒப்புக்கொள்ள அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவது மற்றும் உள்ளூர் NHS சேவைகளின் செயல்திறனைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளை NHS இங்கிலாந்து அமைப்பு முன்னெடுத்து வருகின்றது.
இந்த NHS இங்கிலாந்து அமைப்பு இரத்துச் செய்யப்படும் என பிரதமர் கீத் ஸ்டார்மர் அறிவித்துள்ளார். ஹல்லுக் நகரில் நடந்த நிகழ்வில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதனால் மேற்படி அமைப்பில் பணிபுரிந்து வந்த 10,000 முதல் 15,000 வரையானோர் வேலை இழப்பு ஆபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
தேவையற்ற அதிகாரத்துவத்தை குறைப்பதே NHS இங்கிலாந்து அமைப்பை இரத்துச் செய்யும் நடவடிக்கையின் நோக்கம் என்று இங்கிலாந்து பிரதமர் கீத் ஸ்டார்மர் தெரிவித்தார்.
இங்கிலாந்து மக்கள் இரண்டு அடுக்கு அதிகாரத்துவத்திற்கு தங்கள் பணத்தை செலவிட வேண்டாம் என அவர் இதன்போது தெரிவித்தார்.
அத்துடன், அந்தப் பணத்தை மருத்துவர்கள், தாதிகள், அறுவை சிகிச்சைகள் மற்றும் பொது மருத்துவர் நியமனங்கள் ஆகியவற்றிற்கு செலவிட வேண்டும் என்று அவர் கூறினார். உழைக்கும் மக்களின் முன்னுரிமைகளில் அரசாங்கத்தை மையப்படுத்தி, பணத்தை முன்னணிக்கு மாற்றுவோம் என்றார்.
NHS இங்கிலாந்தை ஒழிப்பதன் மூலம் NHS நிர்வாகத்தை மீண்டும் ஜனநாயகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறேன் என பிரதமர் கீத் ஸ்டார்மர் தெரிவித்தார்.