3
இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதியை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இன்று (20) நண்பகல் 12 மணியுடன் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் நிறைவடைந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, 2025 மே மாதம் 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமையன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை கருத்தில் கொண்டு, மாவட்டச் செயலகங்கள் செயற்படுமாறும் தேர்தல் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.