செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு இலண்டனில் உலக சதுரங்க பேரவையின் 3வது சதுரங்க போட்டி நாளை

இலண்டனில் உலக சதுரங்க பேரவையின் 3வது சதுரங்க போட்டி நாளை

1 minutes read

உலக சதுரங்க பேரவையின் 3வது சதுரங்க போட்டி நாளை 23ம் திகதி March மாதம் 2025 ஞாயிற்று கிழமை London Alperton Community Hall HA0 4PW இல் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

பிரித்தானியாவின் பல பகுதிகளில் இருந்து 7 வயது முதல் 61 வயது வரை மொத்தமாக 165 ற்கு மேற்பட்ட போட்டியாளர்கள் போட்டியிட உள்ளனர்.

வேக சுற்று போட்டிகளில் 10,13,16 வயது மற்றும் open என 4 பிரிவில் 1st, 2nd, 3rd, 4th, 5th சிறந்த பெண் போட்டியாளர்களுக்கும், மூத்த போட்டியாளர்களுக்கும் வெற்றி கிண்ணங்கள் வழங்கபடவுள்ளன.

காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணிவரை ஒவ்வொரு சுற்றுகளாக போட்டி இடம்பெறும்.

காலை ஆரம்ப நிகழ்வின் பிரதம அதிதியாக Honourable London Assembly Member Brent & Harrow Krupesh Hirani அவர்களும் சிறப்பு விருந்தினராக Wembley Central ward councillor Mr Rajan Seelan அவர்களும் சிறப்பித்து போட்டியை ஆரம்பித்து வைப்பார்கள்.

பிற்பகல் போட்டியின் இறுதியில் பிரதம விருந்தினராக Brent North MP Honourable Barry Gardiner ம் சிறப்பு விருந்தினராக, Pinner Ward Councillor Mr Kuha Kumaran அவர்களும் பரிசளிப்பு வழங்கி இந்த நிகழ்வை சிறப்பிப்பார்கள்.

இப்போட்டியானது உலக தமிழர் சதுரங்கப் பேரவையின் தலைவர் திரு தர்மரட்ணம் ரகுராஜ் அவர்களின் தலமையில் இவ் அமைப்பின் ஸ்தாபகர் திரு கந்தையா சிங்கம் அவர்களின் நெறிபடுத்தலிலும் இப் பிரமாண்டமான சதுரங்க போட்டி மூன்றாவது முறையாக நடைபெற உள்ளது.

இந்த சதுரங்க போட்டிக்கு London ஐ மையமாக கொண்டு இயங்கும் Lotus Caring Hands பிரதம அனுசரனையாளராகவும், இணை அனுசரணையாளர்களாக First Choice Badminton Club ம் Spot on Money யும் ஆதரவளிகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More