புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு இலண்டன் தமிழர் சந்தை இன்று ஆரம்பம் | திரளென பார்வையாளர்கள் வருகை!

இலண்டன் தமிழர் சந்தை இன்று ஆரம்பம் | திரளென பார்வையாளர்கள் வருகை!

2 minutes read

   இன்றும் நாளையும் இலண்டன் தமிழர் சந்தை (London Tamil Market) நடைபெறுகின்றது. நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் வர்த்தகர்கள் பங்குபற்ற பெருமளவு வருகையாளர்கள் வருகைதந்த வண்ணம் இருந்தனர். இன்று காலை பத்து மணிக்கு ஆரம்பமாகி மாலை எட்டு மணிக்கு நிறைவடைந்தது. மீண்டும் நாளை காலை பத்து மணிக்கு ஆரம்பமாக உள்ளது. இரு நாட்களும் பல்வேறுபட்ட நிகழ்வுகளும் இசை நிகழ்வும் அரங்க மேடையில் இடம்பெறுகின்றது. அத்துடன் பங்குபற்றும் வர்த்தகர்களுக்கான அறிமுகத்தினை தொடர்ந்து அறிவிக்கப்பட்டவண்ணம் இருந்தது.

பிரித்தானிய தமிழ் வர்த்தகர் சம்மேளனத்தின் பிரமாண்டமான ஏற்பாட்டில் இவ்வாண்டும் இலண்டன் தமிழர் சந்தை நிகழ்வானது புலம்பெயர் தமிழர்களின் தனித்துவமான அடையாளமாக நடைபெறுகின்றது.

பிரித்தானியாவில் தமிழர்கள் வர்த்தக நடவடிக்கைகளில் பெருமளவில் முதலீடுசெய்து வருகின்றனர். தமிழ்ச் சமூகம் மேலைத்தேச நாடுகளில் தமது இருப்பினை வலுப்படுத்த அவர்களது பொருளாதர மேம்பாடு இன்றியமையாத ஒன்றாக இருப்பதை முன்னிறுத்தி சம்மேளனத்தின் செயற்பாடாக இந்த வர்த்தக கண்காட்சி இடம்பெறுவது வரவேற்கத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More