புலம்பெயர் நாட்டில் பல பெண்களின் திறமைகள் இலைமறைகாயாக மறைந்துள்ளது. அதனை கனியாக்கி சந்தைக்கு கொண்டு வருவதில் காலடி எடுத்து வைத்துள்ளது வணக்கம்LONDON லேடிஸ் டுடே.
இன்று நாம் அறிமுகம் செய்வது திருமதி காயத்திரி றொஷான். இவர் உயர் கல்வியை யாழ் வேம்படி மகளிர் கல்லூரியிலும் பட்டப்படிப்பை யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் முகாமைத்துவ பீடத்திலும் கற்றுள்ளார். இத்துடன் பரதநாட்டியத்தில் தேர்ச்சி பெற்று இன்று ஒரு நடன ஆசிரியராகவும் உள்ளார்.
திருமதி காயத்திரி றொஷான் அவர்கள் கேக் அலங்காரம் செய்யும் முயற்சியில் இன்று இறங்கியுள்ளார். சிறப்புத்தேர்ச்சியுடனும் அழகியலுடனும் பல வண்ண கேக்குகளை அலங்காரம் செய்து வருகின்றார். தனக்கே உரித்தான வகையில் ஆர்ச்சரியப்பட வைக்கும் வகையில் இவரது கேக் அலங்காரம் அமைகின்றது. விஷேடமாக பட்டர் ஐசிங்கில் மிகவும் அழகான கேக்குகளை செய்கின்றார்.
தனது உறவினர்கள் நண்பர்கள் வட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட இவரது முயற்சி இப்போது சிறு தொழிலாக மாற்றமடைவது பாராட்டத்தக்கது. இவர் மேற்கு லண்டனில் உள்ள Ruislip பகுதியில் வசிக்கின்றார்
குழந்தைகளின் பிறந்தநாளுக்கோ அல்லது பெரியவர்களின் பிறந்தநாளுக்கோ திருமண நாட்களுக்கோ விரும்பிய மாதிரி கேக் அலங்காரம் செய்து கொடுக்கின்றார்.
திருமதி காயத்திரி றொஷான் தயாரித்த வண்ண கேக் அலங்காரங்களின் சில படங்களை உங்களிற்காக இங்கு இணைத்துள்ளோம். மேலும் வாசகர்களே உங்களிற்கு இவருடைய சேவை தேவையாயின் கீழே உள்ள மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொண்டு ஆர்டர் செய்து கொள்ளலாம்.
Email : gayathri.roshan@gmail.com
Facebook : https://www.facebook.com/AshmiCake
தேன்மொழி | வணக்கம் LONDON க்காக
(எமது இணைய வாசகர்களே; உங்களிடமும் சில திறமைகள் இருக்கலாம். உங்களையும் அறிமுகம் செய்ய தயாராக இருக்கின்றோம். உங்கள் விபரங்களுடன் தொடர்பு கொள்ளவும். எமது மின்னஞ்சல் முகவரி – vanakkamlondon@gmail.com , நன்றி.)