இது எல்லா பெண்களுக்குமான எச்சரிக்கை!’ இந்தியாவின் மும்பையின் இரவு நேர விடுதி ஒன்றிலிருந்து, ஒரு பெண்ணைக் கடத்திச் சென்ற 5 குண்டர்கள், அவளை பாலியல் பலாத்காரம் செய்து வீதியில் வீசிச் சென்றுவிட்டனர்’ என்று சமீபத்தில் ஒரு வழக்கு பதிவானது.
பாதிக்கப்பட்ட பெண்ணை விசாரித்தபோது, ‘என்ன நடந்தது என்பது சிறிதளவுகூட என் நினைவில் இல்லை’ என்றார். ஆனால், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருந்தது மருத்துவப் பரிசோதனையில் உறுதியானது. ‘அந்தப் பெண்ணுக்கே தெரியாமல், இது எப்படி நடந்திருக்க முடியும்? என்று அதிர்ந்த மருத்துவர்கள்… மேற்கொண்டு அந்தப் பெண்ணை பரிசோதித்ததில், ஒரு மயக்க மருந்தை குளிர்பானத்தில் கலந்துகொடுத்து, சீரழித்துள்ளனர் என்பது தெரிந்தது. ‘ஃபேஸ்புக்’கில் சுழன்றுகொண்டிருக்கும் இந்தச் செய்தியை… சென்னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் கருத்துத் தெரிவிக்கையில், ”இது மும்பையில் மட்டும் நடந்திருக்கும் கொடுமையல்ல… எல்லா இடங்களிலும் இந்த வகை குற்றம் தற்போது பெருகி வருகிறது” என்று அதிரவைத்தார்.
அத்துடன் ”தற்போது விதம்விதமான மயக்க மருந்து மற்றும் மாத்திரைகள் சாதாரணமாக சந்தையில் கிடைப்பதாகவும் தெரிவித்தார். எனவே பெண்கள் தன்னளவில் விழிப்புடன் இருப்பதும் பெற்றோர்கள் எப்பொழுதும் தமது குழந்தைகளுக்கு முதல் நண்பர்களாக இருப்பதுவும் மிகவும் அவசியம் என்றார்.
தற்போது தென்ஆசிய நாடுகளில் பெண்கள்மீதான வன்முறைகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.