ஐ.நாவின் உலக அமைதிகாக்கும் படைக்கு முதல் முறையாக ஒரு பெண் தளபதியை நியமிப்பதாக நேற்று ஐ.நா அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ.நா. பொது செயலாளர் பான்-கி-மூன் கூறும் போது உலக அமைதிகாக்கும் படைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தளபதி மேஜர் ஜெனரல் கிறிஸ்டின் லுண்ட் வரும் ஆகஸ்ட் மாதம் 13ம் தேதியில் இருந்து இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என கூறினார். மேலும் இவர் நார்வே நாட்டைச்சேர்ந்தவர். துருக்கியின் சைப்ரஸ் பிரிவுக்கும், கிரீசிற்கும் இடையில் உள்ள 112 மைல் நிலப்பரப்பும், 900 ராணுவத்துருப்புகள் அடங்கிய காவல்துறையும் இவரது கண்காணிப்பின் கீழ் செயல்படும் என கூறினார்.