நச்சுக் காய்கறிகள் மற்றும் பழங்கள்: கர்ப்பிணிகளே உஷார்! பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ள காய்கறிகள், பழங்கள் உட்கொள்ளுவதை தவிருங்கள். பூச்சிக்கொல்லி மருந்தை எப்படி அகற்றுவது?
நச்சுக் காய்கறிகள் மற்றும் பழங்கள். நாம் உண்ணும் உணவில் நமக்கே தெரியாமல் விஷம் கலக்கப்படுகிறது. அதில் விஷம் இருப்பதை அறியாமல் உட்கொள்கிறோம். அந்த விஷம் உங்களை மெல்லக்கொல்லும்.
நச்சுக் காய்கறிகள் மற்றும் பழங்கள்
நீங்கள் வாங்கும் காய்கறிகளில் பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்பட்டுள்ளது. நீங்கள் வாங்கிய காய்கறிகள், ஆர்கானிக் முறையில் உற்பத்தி செய்யப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது?
ஆர்கானிக் முறையில் உற்பத்தியான காய்கறிகள் எனக்கூறி 75 சதவீதம், பூச்சிக்கொல்லி மருந்துகள் கலந்த காய்கறிகளே விற்கப்படுகின்றன என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதைப் படித்துக்கொண்டு இருக்கும் நேரத்தில், பூச்சிக்கொல்லி மருந்துகள் கொஞ்சம் கொஞ்சமாக உங்களது உடல் உறுப்புகளை பாதித்துக்கொண்டு இருக்கலாம்.
இன்றைக்கும் இருக்கும் விவசாயிகள் அவர்களுடைய கடன் பிரச்சனை, காலநிலை மாற்றம் உள்ளிட்டவைகளை சமாளித்து விவசாயம் செய்வதே ஆச்சரியமான ஒன்று.
அவர்களிடம் பூச்சிக்கொல்லி அடிக்காதே என்று கூறுவதை விட நாம் எவ்வாறு விழிபுணர்வுடன் இருக்கிறோம் என்பதே முக்கியம்.
கர்ப்பிணிகளே உஷார்! பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதன் மூலம் உண்டாகும் பாதிப்பு.
- கேன்சர் உருவாகின்றது.
- நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது.
- இனப்பெருக்க விருத்தி குறைகின்றது.
- நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.
- கர்ப்பிணி பெண்கள் பூச்சிக்கொல்லி மருந்துகளை அதிகம் உட்கொள்ளும்போது, குழந்தைகள் பிறவிக்குறைபாட்டுடன் பிறக்கும்.
காய்கறி மற்றும் பழங்களில் இருந்து பூச்சிக்கொல்லி மருந்தை எப்படி அகற்றுவது?
வினிகர்
1:3 விகிதத்தில் வினிகர் மற்றும் நீர் கலந்து, அதில் காய்கறிகளை சிறிது நேரம் ஊறவைத்துக் கழுவினால் 94% வரை பூச்சிக்கொல்லி மருந்துகளை அகற்றலாம்.
வினிகர் விலை அதிகம் என்பதால், எல்லாத் தரப்பு மக்களும் பயன்படுத்துவது கடினம்.
சோடா உப்பு
காய்கறிகள் மற்றும் பழங்களை தூயநீரில், சிறிது நேரம் ஊறவைத்து அலசுவதன் மூலம், பாதி பூச்சிக்கொல்லி மருந்துகளை அகற்ற முடியும்.
அதே தண்ணீருடன், 1 லிட்டருக்கு 10 கிராம் சோடா உப்பு சேர்த்து, காய்கறிகளை 10 முதல் 15 நிமிடம் ஊறவைத்து அலசுவதன் மூலம், கிட்டத்தட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை முழுமையாக அகற்றி விடலாம்.
சோடா உப்பு, வெளிப்புறத்தில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்துகளை மட்டுமல்லாமல், காய்கறிகளின் உட்புறத்தில் படிந்துள்ள பூச்சிக்கொல்லி மருந்துகளையும் அகற்றும் சக்தி கொண்டது.
நீங்கள் ஆர்கானிக் காய்கறிகள் வாங்கினால் கூட, இம்முறையில் காய்கறிகளை கழுவுவதன் மூலம், 100% பாதுகாப்பான முறையில் உணவுகளை உட்கொள்ளலாம்.
நன்றி : Mr.புயல் இணையம்