உதடுகளும் ஒருவரின் அழகை வெளிக்காட்டும். அதனால் தான் பெண்கள் அழகை அதிகரித்துக் காட்ட மேக்கப் போடும் போது உதடுகளுக்கு லிப்ஸ்டிக்குகளைப் போடுகிறார்கள். ஆனால் உதடுகளின் அழகை இயற்கையாகவே அதிகரிக்கலாம்.
பலருக்கு உதடுகள் மென்மையின்றி, தோலுரிந்து, கருப்பாக இருக்கும். இப்படி உதடுகளின் அழகு பாழாவதற்கு அளவுக்கு அதிகமான சூரியக்கதிர்களின் தாக்கம், காப்ஃபைன், புகைப்பிடித்தல் போன்ற பல விஷயங்கள் காரணங்களாக உள்ளன. இங்கு உதட்டின் மேல் உள்ள கருமை நீங்க, உதடு சிவப்பாக டிப்ஸ், உதடுகளை அழகாக வைத்துக் கொள்ள அற்புத வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
* கட் செய்த எலுமிச்ச பழத்தைக் கொண்டு உதடுகளில் தடவும் போது இறந்த செல் நீங்கி புதிய செல் உருவாகுகின்றன.
* மாதுளம் பழத்தின் சாற்றை உதடுகளின் மீது பூசி வந்தால் உதடுகள் அழகாகும்.
* கற்றாழை உதடுகளில் தடவும் போது கருமை மறைந்து சிவப்பழகு பெறும்.
* கொத்தமல்லி இலைகளின் சாற்றை உதடுகளில் தடவினால் கருமை மறைந்து சிவப்பழகு கிடைக்கும்.
* நெல்லிக்காய் சாறு உதடுகளில் தடவும் போது கருமை மறைந்து சிவப்பழகு பெறும்.
* பீட்ரூட் உதடுகளில் உள்ள கருமையை விரைவில் மறைந்து விடும்.
* ஜாதிக்காய்வை அரைத்து உதடுகளில் தடவினால் கருமை மறைந்து சிவப்பழகு கிடைக்கும்.
இவையனைத்தையும் நாம் முயற்சி செய்யலாம். ஏனெனில் சூடான அல்லது வெயிலின் தாக்கத்தில் பணியாற்றும் நபர்களின் உதடுகள் வெடிப்புடனும்., பார்ப்பதற்கு கருப்பாகவும் இருக்கும். இதனை முயற்சிக்கும் பட்சத்தில் மாற்றங்கள் ஏற்படும்.
நன்றி : zeenews.india.com