புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் கன்னத்தில் அதிகப்படியான தசை எப்படி குறைப்பது?

கன்னத்தில் அதிகப்படியான தசை எப்படி குறைப்பது?

2 minutes read

உங்கள் கன்னத்தில் அதிகப்படியான தசைகள் இருந்தால், அதை எப்படி குறைப்பது? என்று சொல்லி தருகிறார் ராதிகா 

உங்களுக்கு எப்போதுமே டபுள் சின் இருந்திருக்கலாம் அல்லது திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு, நீங்கள் கலந்து கொண்ட பல்வேறு விருந்து நிகழ்ச்சிகளில் இருந்து அது வந்திருக்கலாம். ஆனால், திருமண நாள் நெருங்கி விட்டது, உங்களுக்கு டபுள் சின்னும் இருக்கிறது! அதை எப்படி சரி செய்வது என்று கவலைப்படுகிறீர்களா, அதைப் போக்குவதற்கான சில வழிமுறைகள் இங்கே தந்திருக்கிறோம்.

உடற்பயிற்சிகள்
தாடை பயிற்சி: தலையை பின்னோக்கி சாய்த்து, சீலிங்கைப் பாருங்கள். உங்கள் கன்னத்திற்கு கீழே ஒரு இழுவையை உணர்வதற்காக, உங்கள் கீழ் தாடையை முன்னோக்கி அழுத்துங்கள். இதனால் உங்கள் கன்னம், கழுத்து பகுதியில் உள்ள சருமம் இழுக்கப்படுவதை உணரலாம். இதேபோல 10 எண்ணிக்கை வரை வைத்திருக்கவும். ரிலாக்ஸ் ஆகி , தலையை நேராகக் கொண்டு வந்து, இயல்பு நிலைக்குத் திரும்புங்கள். இதை தினசரி 10- முதல் 15 முறைகள் செய்யவும்.

பந்தை வைத்து அழுத்துதல்: ஒரு 9”அல்லது 10” பந்தை எடுத்து, அதை தாடைக்குக் கீழே வைத்துக்கொள்ளவும். அதை உங்கள் கழுத்து மற்றும் தாடைக்கு இடையே வைத்து அழுத்தவும். இதேபோல தினமும் 25 முறைகள் செய்யவும்.

சீலிங்கிற்கு முத்தமிடுங்கள்: தலையைப் பின்னோக்கி சாய்த்து சீலிங்கைப் பாருங்கள். முத்தமிடுவது போல உதடுகளை குவித்து கொள்ளவும். இதனால் உங்கள் கன்னம் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்கள் இழுக்கப்படும். 5 வரை எண்ணி விட்டு, மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பவும். இதேபோல ஒரு நாளைக்கு 10- முதல் 15 முறைகள் செய்யவும்.நாக்கும் மூக்கும்: உங்கள் நாக்கை எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு வாயிலிருந்து வெளியே நீட்டுங்கள். அதை மேல்நோக்கி சுழற்றி, உங்கள் மூக்கைத் தொட முயற்சி செய்யுங்கள். இதேபோல 10 எண்ணிக்கைக்கு வைத்திருந்து பின் விடுவிக்கவும். இதேபோல ஒரு நாளைக்கு 10 முறை செய்யவும்.

கழுத்தை ஸ்ட்ரெச் செய்யவும்: தலையைப் பின்னோக்கி சாய்த்து சீலிங்கைப் பாருங்கள். நாக்கை எடுத்து அதை வாயின் கூரையில் அழுத்தவும். அதே நிலையில் 8- முதல் 10 வினாடிகள் வைத்திருந்து இயல்பு நிலைக்குத் திரும்பவும். இதை தினமும் 10 முறைகள் செய்யவும்.

தாடை டிவிஸ்ட்: தலையைப் பின்னோக்கி சாய்த்து சீலிங்கைப் பாருங்கள். மேல்நோக்கி பார்த்தவாரே தலையை வலதுபுறம் திருப்பவும். இந்த நிலையில் முதலாவது பயிற்சியாக சொல்லப்பட்ட தாடை பயிற்சியை செய்யவும். அதேநிலையில் 5-8 வினாடிகள் வைத்திருந்து, பின்பு இயல்பு நிலைக்குத் திரும்பவும். இதை இடதுபுறமும் செய்யவும். இதேபோல ஒவ்வொரு பக்கமும் 5 முறைகள் செய்யவும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More