செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் நல்ல நட்பு பிள்ளைகளின் வாழ்க்கையில் முக்கியமான ஒன்று…

நல்ல நட்பு பிள்ளைகளின் வாழ்க்கையில் முக்கியமான ஒன்று…

2 minutes read

எந்த நட்பிலும் ஆரம்ப நிலையிலேயே இருவருக்குள்ளும், ஒரு எல்லையை வகுத்துக்கொள்வது சிறந்தது. அதிலும் இருபாலருக்கு இடையேயான நட்பாக இருந்தால், எல்லைமீறாமல் தொடர்வது சிறந்தது.

இருபது வயதில், நமக்குக் கிடைக்கும் நல்ல நட்பு வாழ்க்கையில் முக்கியமான ஒன்றாகும். எனவே, இந்த நட்பைத் தேர்ந்தெடுப்பதில் சற்றுக் கூடுதல் கவனமுடன் இருக்க வேண்டும். அதற்காக சில டிப்ஸ்:

நம்பகத்தன்மை:

ஆரம்ப காலத்தில் நமக்குக் கிடைக்கும் நட்பில், இந்த நம்பகத்தன்மையை எதிர்பார்க்கத் தேவையில்லை. அதுவே, இருபதுகளில் அமையும் நட்பு என்றால், இருவருக்குள்ளும் நம்பகத்தன்மை கட்டாயம் இருக்க வேண்டும். ஏனென்றால், இந்த நட்பு உங்களின் இறுதிக்காலம் வரை கூட நீடிக்கலாம். அப்படி இருக்கும் நட்பில், பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். அதுபோன்று நண்பர்களிடம் கூறுபவை, மூன்றாம் நபருக்குச் செல்லாமல், ரகசியம் காக்கப்படுவது அவசியம். எனவே, எதிலும் நம்பிக்கையான நட்பை அமைத்துக்கொள்வது அவசியம்.

நல்வழிப்படுத்தும் நட்பு:

20 வயது என்பது நல்லது, கெட்டதைச் சரியாக ஆராய முடியாத கட்டம். பிரச்சினைக்கான தீர்வைத் தேடும் பருவம். இதில், யார் நமக்குச் சாதகமாகவும், ஆதரவாகவும் பேசினாலும் அவர்களிடம் மனம் சாயும். அப்படி இருக்கும் பட்சத்தில், நாம் தேர்வு செய்யும் நட்பு, குழப்பமடைந்த மனதை நல்வழிப்படுத்தும் நட்பாக இருக்க வேண்டும். அதை விடுத்து, தவறான பாதையில் கொண்டு சென்றால், எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிடக்கூடும். எனவே, நட்பைத் தேர்வு செய்யும் போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

எல்லை மீறாமல் இருத்தல்:

எந்த நட்பிலும் ஆரம்ப நிலையிலேயே இருவருக்குள்ளும், ஒரு எல்லையை வகுத்துக்கொள்வது சிறந்தது. அதிலும் இருபாலருக்கு இடையேயான நட்பாக இருந்தால், எல்லைமீறாமல் தொடர்வது சிறந்தது.

பழமையைக் கைவிடாதீர்கள்:

சிலருக்கு, பள்ளிப் பருவத்தில் தொடங்கிய நட்பு 20-களிலும் தொடரக்கூடும். புதிய நட்பு அமையும்போது, அதற்கு முக்கியத்துவம் கொடுப்பது இயல்பான விஷயம். அதற்காக, பழைய நட்பை எக்காரணம் கொண்டும் ஒதுக்காதீர்கள். சிறு வயது நட்பு என்பது, சரியாக இருக்கும் பட்சத்தில் நம்மைப் பற்றிய பல நிறை-குறைகள் அந்த நட்புக்குத் தெரிந்திருக்கும். புதிய நட்பினால், நமக்கு ஏதேனும் பிரச்சினை வந்தால் கூட, பழைய நட்பினால் தீர்வு காண முடியும். எனவே இரண்டையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பது அவசியம்.

பெற்றோரின் கருத்துகள்:

சிறு வயதில் இருந்து நம்மிடம் பழகும் நண்பர்களைப் பற்றி, முழுமையாக நம் பெற்றோருக்குத் தெரியும். நட்பில் உள்ள நன்மைகள், ஆபத்துகள் எது என்பதை நம்மால் தெளிவாகக் கணிக்க முடியாது. அதுவே, பெற்றோர்களால் கட்டாயம் கணிக்க முடியும். எனவே, நண்பர்களைத் தேர்வு செய்யும்போது, பெற்றோரின் கருத்துகளைக் கேட்பது அவசியம். அதில் அவர்கள் கூறும் நிறை, குறைகளைச் சரியாக புரிந்து கொண்டு, நட்பை வளர்த்தால் அதை மகிழ்ச்சியாக கொண்டு செல்ல முடியும்.

நன்றி | மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More