பெண்கள் தங்களது தோற்றத்தை மேம்படுத்தும் அழகு சாதனங்கள், ஆடைகள், அலங்காரப்பொருட்கள் போன்றவற்றில் மிகுந்த கவனம் செலுத்துவார்கள். ஆனால் அவற்றை விட முக்கியமானது உள்ளாடடைகள் சார்ந்த விஷயங்கள். இவற்றில் பலருக்கு போதிய விழிப்புணர்வு இல்லை என்பதே உண்மையாகும்.
வியார்வையால் ஏற்படும் அரிப்பு, உள்ளாடை அணிவதால் ஏற்படும் தழும்புகள் போன்ற பல பாதிப்புகளை பெண்கள் எதிர்கொள்கின்றனர். இவற்றை தவிர்க்க சில பொருட்களை கைவசம் வைத்திருக்க வேண்டும். அதை பற்றிய குறிப்புகள் இங்கே…
ஸ்வெட் பேட்
பெண்களின் அக்குள் பகுதியில் வியர்பை அதிகமாக வெளியேறும். தொடர்ந்து வியர்க்கும் போது நுண் கிருமிகளால் தொற்று ஏற்பட்டு அரிப்பு உண்டாகும். மேலும் வியர்வை தொடர்ந்து படிவதால் துணிகள் நனைந்து ஒரு வித அசவுகரியத்தை ஏற்படுத்தும். இதை தவிர்க்க சந்தையில் கிடைக்கும் ஸ்வெட் பேட் வாங்கி பயன்படுத்தலாம். இதை அக்குள் பகுதியில் உள்ள துணியில் ஓட்டிக்கொள்ளலாம். வெளியேறும் வியர்வையை இந்த பேட் உறிஞ்சிக்கொள்வதால் எந்த பிரச்சனையும் ஏற்படாது. பயன்படுத்திய பின்பு அதனை அப்புறப்படுத்தி விடலாம்.
இன்விசிபிள் பிரா ஸ்ட்ராப்
வலை போன்ற துணி ரகங்களில் தயாரிககப்பட்ட உடைகள் அணிவது தற்போது ட்ரெண்டிங்காக இருக்கிறது. இவ்வாறு அணியும் போது உள்ளாடையில் உள்ள ஸ்ட்ராப் வெளியில் தெரிந்து சங்கடத்தை ஏற்படுத்தும். இதை தவிர்க்க கண்ணுக்கு தெரியாத வகையில் கண்ணாடி போன்ற பிரா ஸ்ட்ராப் கிடைக்கிறது. அணியும் உள்ளாடையில் இருக்கும் ஸ்ட்ராப்பை நீக்கி விட்டு இதை அணிந்து பயன்படுத்தலாம்.
தோள்பட்டை பேட்
இறுக்கமான உள்ளாடைகளை பெண்கள் தொடர்ந்து அணியும் போது தோள் பட்டையில் அழுத்தம் உண்டாகும். அதன் காரணமாக நாளடைவில் தோள்பட்டை சருமத்தில்கருப்பு நிறத் தழும்பு ஏற்படும். இதை தவிர்ப்பதற்கு சிலிக்கான் கொண்டு தயாரிக்கப்பட்ட தோள்பட்டை பேட் உதவுகிறது. தோள்பட்டை மீது இதை அணிந்து அதன் மேல் உள்ளாடைடையின் பட்டையை வைத்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்படிருக்கிறது. இதனால் சருமத்தில் அழுத்தம் ஏற்பட்டு தழும்புகள் உண்டாகாது.
ஷேப் வேர்
பருமனான உடல் அமைப்பு கொண்டவர்கள் புடவை அணியும் போது இடுப்பு பகுதி சதையை உள்ளடக்கி புடவையின் மடிப்பை சரியாக எடுத்து காட்ட உதவுவதே ஷேப்வேரின் வேலையாகும். பாவாடை போன்று இருக்கும் இதில் இரண்டு பக்கமும் கால்களை நகர்த்துவதற்கு வசதியான அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நன்றி | மாலை மலர்