7
மனிதப் பிறவியின் பயனிதுவென
இப்போதுதான் புரிந்தது…
அவளது புன்னகையில்
பிறப்பெடுக்கும் அங்கீகாரங்கள்!
கற்றது கைப்பிடி அளவுதான்னென்று
இப்போதுதான் புரிந்தது
அவளது அன்பின்
அரவணைப்பில் அகமகிழ்ந்தது!
எதிர்காலம் ஒரு வினாக்குரியானபோது
புதிரல்ல நம் வாழ்க்கையென்று
திட்டமிட்டு அவளால்
தடம்பதித்தது நிகழ்காலங்கள்!
எல்லா வளமும் நலனும்
இருவரின் புரிதலில்
ஒவ்வொருநாளும்
பிறப்பெடுக்கின்றன!
நன்றி : கா.ந.கல்யாணசுந்தரம் | கவிதை.காம்