வயிற்றில் பிறவா
உயிர்கென;
உயிரையே கொடுப்பவன்
தோழனே!
உள்ளும் புறமும்
தூய்மையாய்;
உயிர்மூச்சில் கலந்தவன்
தோழனே!
பிரிவால் நட்பு
மறப்பதில்லை;
பிரிந்தால் நெருங்குவது வேறெதுவுமில்லை!
காலங்கள் கடந்தும்
சுமையில்லை;
களங்கமற்ற நட்பில்
பிழையில்லை!
பொன்னும் பொருளும்
இழப்பினும்;
நட்புகள் ஓர்நாளும்
விலகாதே!
நினைவுகள் கனவில்
வந்தாலும்;
வலிகள் மறப்பது
நட்பாலே!
அரட்டைகள் சேட்டைகள்
சண்டைகளோ;
அந்நொடி மறந்து
பழகியிருப்போம்!
உடலால் பிறப்பால்
வேறுபட்டும்;
நட்பால் நாமே
ஒன்றிருப்போம்!
-ஆ.பிரவின் ராஜ்
நன்றி : எழுத்து.காம்