கட்டிக்கரும்பு வெளஞ்சிருக்கு
காடெல்லாம் செழிச்சிருக்கு
தைமாசம் பொறக்கையிலே
மனசெல்லாம் நெறஞ்சிருக்கு
பச்சைப்போர்வை போர்த்திநிக்கும்
நெல்வயல் அங்கே.. இன்னும்
சிலநாளில் தலகுனியும்
கதிர் முதிர்ந்தாலே..
முதிர்ந்த கதிர் அறுத்தெடுத்து
அடிச்சுஅத பிரிச்செடுத்து
அரிசியாக்கி தவிடுநீக்க
பொங்கல் வைக்க காத்திருக்கோம்
தென்னந்தோப்புல..
பொங்கல் பொங்கிவரும் போதெல்லாம்
புதுத்துணிய கட்டிவந்து
சுத்திநின்னு குலவையிட்டு
சத்தமிட்டு சொல்லிடுவோம்
பொங்கலோ பொங்கல்
சொல்லு
பொங்கலோ பொங்கல்..
M.MOHAMED RAFIQ
நன்றி : எழுத்து இணையம்