வறுமையின் நிறம்மிகக்
கொடூரமானது அது
வலிகளாலும் ஏக்கங்களாலும்
நிரம்பிக் கிடக்கிறது.
இளஞ்சிட்டுக்களின்
இளமையையும் இனிமையையும்
தட்டிப்பறித்துக்கொண்ட மிருகம்
தன்னைக் காலம் என்று
அறிமுகம் செய்துகொள்ளும்.
மீண்டும் உருவமறியா இரணங்களுக்குள்
நம்மைத் தள்ளிவிட்டு
நாம் துன்பத்தில் துடிதுடிக்க அது
கை கொட்டி இரசிக்கும்.
பசியில் குடல் வெந்து
சோரும் எம்மை தன்
வார்த்தைகளால்க் கொல்லத்துடிக்கும்.
தட்டோடு தெருவில் நின்றால் தன்
எள்ளல் நகையாலும்
ஏளனப்பார்வையாலும் கொன்று வீசும்.
நெருப்பில் போட்ட புளுவாய்
நாம் துடிப்பதையெல்லாம்
கண்விளித்துக் கண்டு இரசிக்கும்.
இடையிடையே
சில ஆர்த்மாத்த வார்த்தைகளும்
அன்புப்பார்வைகளும்
பாத்திருந்து குளிப்பறிக்கும்
அதிலிருந்து மீழமுடியாமல்த் தவிக்க
கைகொடுத்துக் காலைவாரும்.
பின் தலைசிதறி விழும் போது
தூரமாய் நின்று வேடிக்கைபார்க்கும்.
கேட்டால் ஆயிரம் காரணம் சொல்லி
அரைநொடியில்த் தப்பிவிடும்
மனிதனை மனிதன்
வேட்டையாடும் காலத்தில்
சபிக்கப்டட்ட ஏழைகளாய்
தெருவில் பிணமாக முன்பு
கொடூர வார்த்தைகளால்
வலிக்கக் கொல்லும்
வறுமையின் நிறம் மிகக்
கொடூரமானது!!!!!
– கூடலூர் சிந்துஷன் –
நன்றி : tamilcnn.lk