மேக கருமுகில்களாய் எம் உறவுகள்
கதறித் துடித்தநாள்
தமது தாய்மண்ணை முத்தமிட்டு
உயிர்விட்ட கொடிய நாள்
விடியல் எனும் தாகம் சுமர்ந்து
புதையுண்ட இருண்ட நாள்
பதுங்கு குழிகளினுள் எம் முகங்கள்
கருகி வாடிய நாள்
எம் உறவுகளின் மேலே எம் உறவுகளே
ஏறி நடந்த இறுதி நாள்
கைக் குழந்தை பசியினால்
தன் தாயின் மார்பு தேடிய கடைசி நாள்
உறவுகளைக் காணாது விழியிரண்டில்
நீர்வடிய அழுத நாள்
முன் நகர்தல்கள் கானல் நீராய்
மாயமான நாள்
முள்ளிவாய்க்கால் பூமியில்
தமிழ் இரத்தம் படிந்த செங்குருதி நாள்
இவைகள் மட்டுமல்ல இன்னும் பல
எதனை மறப்போம்
மகிழையாள்..
.
நன்றி : tamilcnn.lk