செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் காதலன் கோபம் | கவிதை | கண்ணன் செல்வராஜ்

காதலன் கோபம் | கவிதை | கண்ணன் செல்வராஜ்

1 minutes read

தண்ணீர் இல்லா பாலை வனத்தில்
தாகம் எடுப்பது போல

காலை முடிந்த காய்ந்த வேளையில்
காகம் கரைவது போல

காதலி இல்லா கடற்கரை மணலில்
மோகம் வருவது போல

தித்திப்பு நிறைந்த திருவிழா காலம்
சோகம் தெரிவது போல

பற்றற்ற ஞானி பாதையில் சென்று
பாகம் பிரிப்பது போல

பாசம் தெரிந்ததும் அம்மாவின் வயது
வேகம் எடுப்பது போல

அப்பாவின் அன்பு புரிந்ததும் அவரது
தேகம் மறைவது போல

அன்பு என்மேல் இல்லா உன்னை-வி
வாகம் முடிக்கும் எண்ணம்

நன்றி : கண்ணன் செல்வராஜ் | எழுத்து.காம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More