கற்பனையில் எழுதா காவியம்
தூரிகையில் வரையா ஓவியம்
சிற்பத்தில் காணா அழகியல்
என் விழிகளின் தேடலில்
இதயத்தில் விழ
எழுந்தாள் காதலாய் …
நிலவின் ஒளியில்
தோளில் முகம் சாய்த்து
கைவிரல் பிடித்து கடற்மணலில்
அவள் வரைந்த வரிகள்
இதயத்தில் கல்வெட்டாக…
வாடையின் குளுமையில்
காதோரம் அவள் படித்த
வார்த்தைகள்
நெஞ்சை அள்ளித்
தின்னும் இலக்கியமாக….
உதடும் உதடும் உண்ணாது
இமைப்பொழுதில்
பதிந்த அவளின் முத்தங்கள்
நரம்பினில் பாய்ந்து உணர்வில் புகுந்து
என்னுயிரோடு அவளை பிணைக்க…
ஆர்கலி எண்ணங்கள்
அவளின் நீச்சல் குளமாக
பொங்கி எழும்
காதல் அலைகள்
காகிதங்களை நனைக்க…
அரும்பும்
ஒவ்வொரு கவிதையிலும்
அவளே பூக்கிறாள்!
– சகாய டர்சியூஸ் பீ
நன்றி : எழுத்து.காம்