மண்வெட்டியைச் சாய்த்துவிட்டு அன்றைய நாட்கூலியை பிரித்துப் பார்க்கிறான் களைப்பு நீங்காத உழைப்பாளி. துலாக்கோல் கல்லாய் அழுத்திக் கொண்டிருக்கும் வாழ்வின் சுமையை மடியில் சுருட்டிய தாள்கள் ஏளனம் செய்கின்றன.
உயிர்க்கயிற்றை கொஞ்சம் கொஞ்சமாய் இழுத்துக் கொண்டிருக்கிறோம். அள்ளவே முடியாத ஆழத்திற்கு சென்றுகொண்டிருக்கிறது விடாய்தீர்க்கும் மருந்து. 26062022
துவாரகன்
வணக்கம் இலண்டன் WHATSAPPநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW