வங்கம் சூழ்ந்து பெற்று எடுத்த
தங்க நிகர் அழகு நாட்டில்
பங்கம் விளை வித்தது நீயோ
அங்கம் இழந்து நிக்கிறது தனியே
பித்து பிடித்த மத வெறியனே
புத்தன் சிவன் யேசு அல்லாஹ்
இத்தனை மதம் இருப்பது ஏனடா
செத்தவர் அனைவரும் மனிதர் தானேடா
உயிர்த்த ஞாயிறில் உயிர் பறிக்க
உனக்கு உரிமை தந்தவர் யாரடா
உயிரை மீதம் கொண்டவர் சிலரோ
உறவை இழந்து நிக்கிறார் பாரடா
தேளின் விடம் கொண்டவன் உன்னால்
தேடி அழுகிறோம் குருதியில் உறவை
தேசம் கடந்து வந்தவரும் இங்கு
தேகம் உறைந்து கிடக்கின்றார் சேர்ந்து
வஞ்சம் தீர்க்க குண்டாய் வெடிக்க
நஞ்சு கலந்து பிறப்பு எடுத்தவனே
பிஞ்சுக் குழந்தைகள் கண்ணில் தெரிகையிலும்
கொஞ்சம் மனம் இரங்கலையா உனக்கு
யுத்தம் கடந்த பூமியில் மீண்டும்
சத்தம் வெடிக்க வைத்தது எதற்கு
இரத்தம் தெறித்த சுவர்களை பார்க்க
நித்தம் அழ தோணுது எமக்கு.
கவி வரிகள்
வேல்.நயன்
புளியம்பொக்கணை