9
நினைவுகளை சிதறடிக்கும் ;
’வலிகளை மறக்க வைக்கும்
மருந்தாகி வந்தோம்’ எனும்
மாய
மறைகரங்களின்
தப்புத்தாளங்களில்
விலைபோக எப்படி முடிகிறது சகோதரரே!
நெஞ்சு பொறுக்குதில்லையே….
காணும் சுகம் நிலையென்று
மாய்வோமோ…
அன்பான சகோதரரே!
நிலையான
எங்கள் சுகம் வேண்டி
விலையாக தம் உயிரையே தந்த
நேச உறவுகளை ஆராதிக்கும்
உயிரின் கணங்கள்
இவை அன்றோ….
எம்
நிலை உணரும் பொழுதாக்கி
இனியேனும் உய்வோமே!
-நகுலை மைந்தன்