37
அழகியை நீ தேடுகின்றாய்
நிலைக்கண்ணாடியை நீ பார்த்ததுண்டா? அழகிக்கேற்ற அழகன் தானா?அஞ்ஜெலாஜோலி ஒரு கதை சொன்னாள்
தேவதைகள் வாழுமிடம் சொர்க்கமாம்உன்னைச் சுற்றி ஒரு சொர்க்கத்தை உருவாக்கு
தேவதைகள் ஓடி வருவர்முழு நேர ஊழியனாய்
அவர்கள் தேவைகளை நிறைவேற்றுஉன் தாயாரை அவள் பாராள்
தந்தையைச் சகிக்க மாட்டாள் உன் உறவுகள் தனித்து விடும்உண்மையிலே தேவதை உனக்குத் தேவை தானா?
குணவதியை நீ தேடிக் கொண்டால்
அவள் குடும்ப விளக்காவாள் உன் அம்மாவும் மகிழ்ந்திடுவாள் அப்பாவைத் தன் அப்பா என்பாள்மலர்ந்துவிடும் உன் வாழ்வு..
– பத்மநாபன் மகாலிங்கம்