தந்தை மனம் விரும்பத்
தாயும் உவந்து ஏற்க
பத்து மாதங்களின் பின்
நிகழ்ந்தது அந்த ஜனனம்
இன்னும் சில காலம் உல்லாசமாய்
இருப்போம் என்று இருவரும்
சந்தோசமாயிருக்க எதிர்பாராது
ஏற்படும் ஒரு ஐனனம்
கோவில் குளம் எல்லாம் அலைந்து
விரதங்கள் பல இருந்து
குலசாமியிடம் நேர்த்தி வைத்து
நடப்பது சில ஜனனம்
வைத்தியர்கள் பலர் மாறி
செய்யாத வைத்தியம் செய்து
உடற்குறை சரியாக்கி
நேர்ந்தது அந்த ஜனனம்
உயிர் அணு எடுத்து
கருவுடன் கலந்து வைத்து
வைத்தியரின் திறமையால்
கிடைக்கும் நவீன ஜனனம்
ஜனனம் எவ்விதம் ஆனாலும்
பெண் பூவாய் பிறந்தாலும்
ஆண் மகவாய் மலர்ந்தாலும்
பூமித் தாய் மனம் மகிழ்ந்திடுவாள்
– பத்மநாபன் மகாலிங்கம்