எங்கள் வீட்டுத் தோட்டம்
அழகான சோலைவனம்
மஞ்சள் நிறத்தில் சில பூக்கள்
வெள்ளை நித்தில் பல பூக்கள்
எக்ஸ்ஸோரா மினியும் பெரிதும்
போகையின்வில்லா பல நிறத்தில்
நெடிதுயர்ந்த தென்னை, பனை
சற்றுச் சிறிய கமுகுகளும்
மா, பல, வாழை முக்கனிகள் தரும் மரங்கள்
கோப்பிச் செடி ஒரு பக்கம் கறுவாச் செடி மறு பக்கம்
அரைத்துண்ணத் தூதுவளை மாற்றாக வல்லாரை
நெல்லியும் ஈரப்பலாவும் கூட உண்டு
வேலிக்கு பூவரசுடன் சீமைக்கிழமை, முட் கிளுவை
காற்றின் மாசு அகற்ற வேம்புகள்
முத்துக்கள் உள்ள மாதுளை
கீரை வகைக்கு பசளி, பொன்னாங்கண்ணி,
முருங்கை தவசி முருங்கையுடன்
அகத்தியும் அருகிருக்கும்
சண்டி மரமும் லாவுலுவும் பிணைந்திருக்கும்
இராசவள்ளிச் செடி, வெத்திலைச் செடி
கொய்யாவில் பல வகைகள்
பப்பாயாவும் கஜுமரமும் அன்னமுன்னாவும்
வெய்யிலுக்கு நீர்த்தாகம் தீர்க்க ஜம்புநாவல்
விளாத்திக்கருகே முதிரையும்
பல வர்ண குறோட்டன்களும்
அழகு செய்யும் தோட்டம்!
– பத்மநாபன் மகாலிங்கம்