மரணதேவன் காலதேவன்
இயமன் என்றும் பெயருண்டு
அவன் பெயர் கேட்டாலே மாந்தர்
அஞ்சி நடுங்கிடுவர்
ஐயோ என்பவள்
இயமனின் மனைவி
உயிரை எடுக்க
இயமன் வரும் போது
ஐயோ என்று
அவளை நோக்கி
அபயக்குரல்
கொடுப்பாரும் உண்டு
பிறந்தவர் யாவரும்
இறப்பது உறுதி
பிறக்கும் போதே
இறக்கும் திகதியும்
எழுதப்பட டிருக்கும்
என்பாரும் உண்டு
பிறந்த சிசுவும்
இறப்பது உண்டு
பாலகரும் மரணம்
அடைவதும் நடக்கும்
இளைஞர் யுவதிகள் கூடச்
சாவடைவதும் உண்டு
வயது முதிர்ந்து
நடை தளர்ந்து
இறப்பர் முதியோர் பலர்
இடை நடுவில்
மாண்டு போபவர்
ஏராளம் உண்டு
நோயினால் உயிரிழந்தார்
விபத்தினால் சாவடைந்தார்
விசம் தீண்டி மாண்டு போனார்
யுத்தத்தில் உயிரிழந்தார்
சுனாமிக்கு இரையானார்
என்பதெல்லாம் சாட்டுகளே !
எங்கிருந்தோ வந்தோம்
எவரும் அறியார்
எங்கே போகப் போகிறோம்
யாரும் அறியார்
ஆனால் இறப்பு
மட்டும் நிச்சயம்
வரும்போது இருந்ததை விட
பூமியை அழகாக விட்டுச் செல்வோம்
எல்லோருடனும் அன்பாகப்
பண்பாக பழகி மகிழ்வோம்
வரும் போது எதையும் கொண்டு வராத நாங்கள்
போகும் போது வெறும் கையுடன் போவோம்
– பத்மநாபன் மகாலிங்கம்