கிளிநொச்சி பெரு நகரம்
வருபவரோ பெருங்கூட்டம்
வந்தவர்க்கு உணவூட்ட
உணவகங்கள் போதாது
அம்மா சமையல் அப்படி என்பார்
மனைவி சமைத்தால் உத்தமம் என்பார்
கண்டதை உண்டதால் கொலஸ்ரோல்
கூடிப் போகும் , வயிறு கடகடக்கும்
கிளிநகரில் அம்மாச்சி வந்தாச்சு
சனக்கூட்டம் நிறைஞ்சாச்சு
தாய்மாரின் சமையல் தாய்மாரே
பரிமாறல் செலவுமோ மிகக் குறைவு
வயிற்றுப் போக்கும் நின்று போய்ச்சு
கடகடப்பும் மறைஞ்சு போய்ச்சு
கொலஸ்ரோலும் எமக்கில்லை
வாய்ககு ருசியாய் சத்துணவு
அம்மாச்சி கடை வந்தாச்சு
அச்சமும் நீங்கிப் போய்ச்சு
மாசக் கடைசியிலே
காசும் மிச்சமாய்ச்சு
சுகாதாரமாய்ச் சமையல்
துப்பரவான உணவு வகை
தோசை சுடும் ஒரு அம்மா
வடை போடும் இன்னொருவர்
அப்பமும் உண்டு அங்கே
இட்டலியும் தானுண்டு
சாம்பாரும் சம்பலும்
தரமானதாய் இருக்கும்
பிட்டிலே வகைகள் பல
அரிசிமாப் பிட்டுண்டு
கோதுமைமாப் பிட்டுமுண்டு
சலரோகக்காரர் குரக்கன் பிட்டுண்பர்
கடலை வடை உழுந்து வடை
சூசியமும் அங்குண்டு
மாம்பழ ஜூஸ் பப்பாயா ஜூஸ்
அன்னாசி ஜூஸ சுவை சொல்லி மாளாது
குடும்பமாய் வரும் மக்கள்
குதூகலமாய் இருந்து உண்பர்
உல்லாசப் பயணிகளும்
உவகையுடன் வந்து உண்பர்
பெண்களின் உழைப்பால்
புகழ் பெற்ற அம்மாச்சி
கிளி நகரில் அமைந்ததனால்
வன்னி மக்கள் மகிழ்ந்திட்டார்
இருந்துண்ணும் வசதி உண்டு
எடுத்துச் செல்ல வழியும் உண்டு
அன்பான உபசரிப்பால்
தொடர்ந்தும் அவர் மனம் விரும்பும்
– பத்மநாபன் மகாலிங்கம்