பண்டாரவன்னியன் புத்தகசாலையின் இரண்டாவது வெளியீடான குடத்தனை உதயன் அவர்களது “இருளுக்குள்ளே ஒரு நம்பிக்கை வெளிச்சம் ” என்ற நாவல் 2024.07.13 ஆம் நாளன்று சனிக்கிழமை தமிழ்மணி அகளங்கன் அவர்களது தலைமையில் வவுனியா நகரசபை பொது நூலகத்தில் இனிதே வெளியீடு கண்டது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக செ.சந்திரகுமார் – கண்ணன் (தலைவர் – தமிழ் விருட்சம்) அவர்கள் கலந்து கொண்டதோடு சிறப்பு விருந்தினராக வி.அனோஜன் (ஆசிரியர் மு/குமுழமுனை மகா வித்தியாலயம்) அவர்களும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தார்கள்.
தலைமை உரையினை தொடர்ந்து வெளியீட்டு உரையினை ஏழாலை அகரா அவர்கள் வழங்கியிருந்தார். முதற் பிரதியினை எழுத்தாளர் குடத்தனை உதயன் அவர்களும் தமிழ்மணி அகளங்கன் அவர்களும் இணைந்து வழங்க ஈழவாணி (எழுத்தாளர், இயக்குநர்) அவர்கள் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து சிறப்புப் பிரதிகளை தமிழ்விருட்சம் கண்ணா அவர்கள் வழங்கி வைத்தார்.
தொடர்ந்து இருளுக்குள்ளே ஒரு நம்பிக்கை வெளிச்சம் நூல் பற்றி
01) கிருஷ்ணராஜ் லிசாந்தினி (காணிப்பதிவாளரும் மேலதிக மாவட்டப்பதிவாளரும் காணிப்பதிவகம் வவுனியா) – இருளுக்குள்ளே ஒரு நம்பிக்கை வெளிச்சம் பேசும் தத்துவங்கள்.
02) ஏழாலை அகரா – இருளுக்குள்ளே ஒரு நம்பிக்கை வெளிச்சம் பேசும் புலம்பெயர் தமிழர் வாழ்வியலும் இருப்பும்.
03) நவரத்தினம்.கபிலநாத் (எழுத்தாளர், ஊடகவியலாளர்.) – இருளுக்குள்ளே ஒரு நம்பிக்கை வெளிச்சம் பேசும் அரசியல்.
04) ஆன் சுவானி கலேந்திரகுமார் (HNDA கணக்கியல் பட்டதாரி) – இருளுக்குள்ளே ஒரு நம்பிக்கை வெளிச்சம் நாவலில் வரும் சிதம்பரம் போன்றவர்களின் சமூகத்திற்கான தேவைப்பாடும் வெற்றிடமும்.
என ஒவ்வொரு தலைப்புகளின் கீழும் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள். மேலும் இந்த நாவலின் பரந்துபட்ட பல கருத்துக்களை ஈழவாணி (எழுத்தாளர், இயக்குநர்) அவர்கள் வழங்கியிருந்தார்.
தொடர்ந்து நிகழ்வின் கதாநாயகன் எழுத்தாளர் குடத்தனை உதயன் அவர்களது பதிலுரையோடும் பண்டாரவன்னியன் புத்தகசாலையினரின் நன்றியுரையுடனும் புத்தக வெளியீட்டு நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.