செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் பண்பாட்டின் இசைமரபில் முகிழ்த்த ஆளுமை ஶ்ரீ குகன் | முன்னாள் துணைவேந்தர் என். சண்முகலிங்கன் பாராட்டு

பண்பாட்டின் இசைமரபில் முகிழ்த்த ஆளுமை ஶ்ரீ குகன் | முன்னாள் துணைவேந்தர் என். சண்முகலிங்கன் பாராட்டு

2 minutes read

ஈழத்து இசையமைப்பாளர் ஸ்ரீ குகனின் இசையமைப்பில் உருவான 100 ஶ்ரீ குகன் 100  வெளியீட்டுவிழா அண்மையில் (18.10.2024)  நாச்சிமார் கோயிலடி சரஸ்வதி மண்டபத்தில்  இடம் பெற்ற வேளை பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த யாழ்.பல்கலைக்கழக  முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்  ’எங்கள் பாரம்பரிய இசைக்கலைஞர் சுப்பையாபிள்ளையின் பேரன்; கதாகாலக்‌ஷேப கலைஞர் கணேச சுந்தரத்தின் புதல்வன்;  மாரபார்ந்த கலைஞானம் ,பயில்வு  -இவற்றினடியான படைப்பாக்கதிறன் ;கூடவே நவீன தொழினுட்ப த்திலான தாடனம்;  இவற்றின் சங்கமமாய் எங்கள் தலங்களை பாடல் பெற்ற தலங்களாக்கும் ஶ்ரீ குகன் படைப்பாக்கம், பண்பாட்டு பெறுமதியானது,  பக்தி இயக்கத்தின் விரிவாக்கமாகவும் தமிழிசையில் படிமலர்ச்சியாகவும்  தொடர்வது ; இவ்விசையாக்கத்தில் கலந்த கவிஞர்கள், பாடகர்கள், இசையாக்கத்திற்கு ஆதரவான ஆலய தர்மகர்த்தாக்கள் எம் பாராட்டுக்குரியவர்கள் ‘என்றார்.

வடக்கு மாகாணசபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்புவிருந்தினராக கவிஞர் ஜெயசீலன், இசைவாணர் கண்ணன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் .

கவிஞர் வேலணையூர் சுரேஷ் வரவேபுரை வழங்கினார்.கல்வியியல் விரிவுரையாளர்  இ.  சர்வேஸ்வரா வெளியீட்டுரை நிகழ்த்தினார்,  பிரதம விருந்தினர் பேராசிரியர் சண்முகலிங்கன் இசை இறுவெட்டினை வெளியிட்டு வைத்தார்;  முதல் பிரதியினை ச,சஞ்சீவ்பாபு பெற்றுக் கொண்டார். கவிஞர் வீரா நயப்புரை வழங்கினார், நிகழ்வில் ஏழிசை மிருதங்க நர்த்தனாலய மாணவிகளின் நாட்டிய அர்ப்பணமும் ஶ்ரீ குகன் இசையில் சப்தஸ்வரா இசைக்குழுவினரின் இன்னிசை கானங்களும் இடம்பெற்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More