இவ்வெளியீட்டு விழாவில் சைவப் புலவர், சைவசித்தாந்த பண்டிதர் சிவஸ்ரீ. பா. வசந்தக் குருக்கள் ஆசியுரையை வழங்க, தமிழ் வாழ்த்துப் பாடலை இலண்டன் தமிழ்ப் பாடசாலை மாணவர்கள் பாடியதுடன், நிகழ்வின் சிறப்பம்சமாக நாட்டிய கலா நிபுணா ஷோபிதா ஜெயசங்கரின் பரத கலாலயம் நடனப் பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சியும் இடம்பெற்றது.
இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் வாழ்த்துரையை ஈழத்தின் மூத்த ஆவணக்காப்பாளர். திரு. பத்மநாப ஐயர், மற்றும் திரு. சி.கிருபாகரன், ஆகியோர் வழங்கினர்.
பாலஸ்தீனம் எரியும் தேசம் நூல் அறிமுகவுரையை திரு. சண்முகதாசன் அவர்களும், ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல் நூலின் அறிமுகவுரையை திரு. நா. சபேசன் அவர்களும் தேசிய சுயநிர்ணயமும் ஐரோப்பிய சிறுபான்மை இனங்களும் நூலின் அறிமுகவுரையை டாக்டர்.வே. ரவிமோகன் அவர்களும் இலங்கை இதழியலில் சிவகுருநாதன் நூலின் அறிமுகவுரையை திரு. கோவிலூர் செல்வராஜன் அவர்களும் வழங்கியிருந்தனர்.
அத்துடன் இந்நூல் வெளியீட்டில் ஈழத்து சிற்றிதழ்கள் பற்றிய சிறப்புரையை திருமதி. மாதவி சிவலீலன் அவர்கள் வழங்க, ஏற்புரையை திரு. ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்கள் நிகழ்த்தினார். இந்த நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.