10
ஏன் இவ்வளவு கருணையோடிருக்கின்றன
என் தெய்வங்கள்
அகலை ஏற்றிவைத்தால்
அமர்ந்துவிடுகின்றன எதிரில்,
எப்போதும் நின்றுகொண்டிருக்கின்றன ~
நினைந்தால் வந்துவிடுகிற தொலைவில்!
தந்துவிட்டுத்தான் தனித்தும்விட்டன~
தொழுதுகொள்ள ஒருதிசையும்,
தொலைந்துகொள்ள ஒருவழியும்
தந்துவிட்டுத்தான் தனித்தும்விட்டன.
நினைந்தாலே நிறைந்துவிடுகிறது பிரிவு
அவ்வளவு போதும் தானே
அன்புக்கும்
அருளுக்கும்!
–கமல் ஆபரன்