செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் வியந்திடும் வீரத்தோடு | நதுநசி

வியந்திடும் வீரத்தோடு | நதுநசி

0 minutes read

கார்காலம் இது
கரிகாலன் வளர்த்த
வேங்கைகள் மாதமிது.
போற்றி தொழுதிடுவோம்.

வீரத்தோடு நாம்
தலை நிமிர்த்து வாழ
தம்முயிர் கொடுத்தவர்.
புகழ் பாடும் மாதமிது.

மதங்கள் கடந்து
இனம் ஒன்றுக்காய்
மண்ணுள் உறங்கும்
மகத்தான மாந்தரவர்.

வியந்திடும் வீரத்தோடு
விடுதலை வேண்டியவர்
போரில் பூகம்பமானார்.
பூமியில் ஈழம் மலர்ந்திடவே!

கார்த்திகையில் பூக்கும்
கார்த்திகைப் பூவை
குறியீடாக்கி தந்தார்
எங்கள் தலைவரன்று.

சிவப்பு மஞ்சள் நிறங்கள்
கண் கொள்ளை கொள்ளும்
பேரழகாய் தெரிந்திட இங்கே
வீரர் அவரை போற்றிடலாம்.

புரிவாயோ என்னை
எந்தன் மனமே!

நதுநசி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More