இடி மழை இடையே
நோய் நொடி அண்டாது
எல்லையில் காத்திருந்த
காவல் தெய்வங்கள்.
உடல் உயிர் உடைமை
எல்லாம் ஈர்த்து கொடுத்து
ஈழமக்கள் வாழ்ந்திட
தம்முயிர் ஈர்ந்தவர்.
உள்ளம் உறங்கிடும்
ஈழ தாகத்தோடு களமாடி
தலைவன் எண்ணப்படி
கோலமிட்டு ஈழம் கண்டனர்.
எதிரியும் தலை வணங்கி
ஒரு கணம் நிலை தடுமாறும்
நம்மவர் துயிலும் இல்லம்
கார்த்திகை காணும் கோலத்தில்.
போரில் வீழ்ந்து வரலாறாகும்
பிறப்பெய்திய பெரு வரம்
மாவீரர் அவர்களுக்கு வாய்க்க
வரமது என்று மகிழ்தல் கூடும்.
விடுதலை வேள்வியில் வீரர்
இலக்கை நோக்கி சென்றிட
நொடிப் பொழுதிலும் உயிர் விட
தம் நெஞ்சணிந்தார் நஞ்சு.
புரிவாயோ என்னை
எந்தன் மனமே!
நதுநசி