வாழ்க்கை மாறிட
வழிகளும் மாறிடல்
வியப்பு இல்லை
அறிந்திடல் நன்று.
நாளை நலமாக
நாம் வாழ்ந்திட
நல்ல வழிகள்
நமக்கு வேண்டும்.
காலத்தோடு சேர்ந்து
நேரத்தை மாற்றி;
மாற்றங்களை தேடி
மெல்ல மாறிடல் நன்று.
திரும்பி பார்த்த போது
வரலாற்றுத் தடமும்
அதைத் தான் சொன்னது
முன்னே நடந்திடும் வழியாக.
நேற்றைய காட்சிகள்
இன்றைய வரலாறுகள்.
வெற்றிக்கு வாய்த்ததை
முன் கொண்டு சொல்வோம்.
ஊன்று தடியாக
நம்மை அது தாங்கிட
அதனோடு சாய்ந்து
வென்று வாழ நடக்கலாம்.
தோற்றிட காரணம்
கண்டு விலக்கிடலாம்.
நாளையும் நாம்
தோற்பதை தடுத்திடலாம்.
மாற்றம் வேறொரு
தோற்றம் கொள்ளும்.
ஆற்றல் கொண்டு அதை
வெல்லும் வாழ்வு வாழ்வோம்.
புதிய பாதை
நமக்கு கொள்வோம்.
நல்லவை எல்லாம்
சேர்த்தே செல்வோம்.
மகிழ்ந்திட நாம்
புதிய பாதைகள்
சமைத்துச் செல்வோம்
சோர்தல் தவிர்ப்போம்.
ஓய்ந்திருந்து பல
சிந்தை கொண்டு
பாய்ந்து சென்று
ஏய்ப்புக்கள் தகர்ப்போம்.
தவறுகளை களைந்து
கற்ற பாடம் கொண்டு
ஏற்றங்கள் காண்போம்
மாற்றங்கள் நன்றே ஆகிட.
சற்றே நில்லுங்கள்.
சொல்வதை கேளுங்கள்.
அதன் பின் செல்லுங்கள்.
வாழ்வை வெல்லுங்கள்.
வெற்றிக்கு வேண்டியது
தந்திரம் மட்டுமே!
சூழ்நிலை அறிந்து
முன்னுள்ளவரை வெல்லு.
நல்லவராக வாழ்ந்து
துன்பங்கள் சுமந்து
தோற்பது காணலாம்.
இது நியதி என்பார்.
கெட்டவராக வாழ்ந்து
இன்பங்கள் பெற்று
வென்று போதல் காண்டு
சோர்ந்து போதல் கூடும்.
கொஞ்சம் சிந்தை
நன்றே கொண்டு
உன்னை நீ கேட்டுக்கொள்
துன்பம் தந்தது யார்?
இறைவன் என்ற
மாயை கொண்டு
நம்ப வைத்து நம்மை
துவழ விட்டு விடுவார்.
தந்திரமாக நீ
மந்திரம் சொல்லி
மாய உலகை புரிந்திட
முனைந்து வென்று நில்.
புதிய பாதை
தானாக தெரியும்.
நன்றாக வாழ்ந்திட
வளமான சூழல் தானாகும்.
நதுநசி