செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் இயற்கையின் பெருந்துயர் | முல்லைக் கமல்

இயற்கையின் பெருந்துயர் | முல்லைக் கமல்

1 minutes read

 

அடுக்குகளில் – பயத்தில் உறைந்த
விழிகளோடுதான் -இருக்கவேண்டி
இருக்கிறது !
தடித்த உடைகளையும் – ஊடுருவுகிறது
பருவ காலத்தின்
பனிக் குளிர்…
மெலிந்த புத்தகங்களின் துயரை – விபரிக்க
வேண்டியதில்லை…!
நிறத்தை – மாற்றுகிறது..
காலம்?..
…………
இலையுதிர் காலத்தில் – காற்று
மரங்களை அசைத்தபோது – எப்படி
ஆடாமல் அசையாமல் நிற்பது?
அருகிலுள்ள தோள்களை -இறுகப்
பற்றிக்கொண்டு – முடிந்தவரைக்கும்
நின்றுகொள்ள – வேண்டியிருந்தது !
………
கோடையில்தான் – பெரும் தீ.
மூண்டு – காடுகளைப் பிடித்துக்கொண்டு,
மலைகளுக்குத் தாவிற்று..
பிறகு – கிராமங்களை,
நகரங்களை,நாடுகளை..
எல்லாமும் – பயத்தில்
உறைந்துள்ளன..!
எதனதோ இதயம் – “தீயில் கருகி,
வானத்தில் அடைந்து – படலமாக
மாறுகிறது?
“கட்டுக்கதைகளால் – யாரையும்
நம்பவைக்க முடியாது.. ?”
எல்லோருமாகச் சேர்ந்து – தீயை
அணைத்துவிட்டு – வந்து
நின்று பேசுங்கள்…”
“இது – யாருடைய குரல் ? “
பல – அடுக்குகளைத் தாண்டி
குரலற்று ஒலிக்கிறது…
ஆனாலும்கூட – இழப்புகள்
எங்குமே – பொதுவில்த்தான் நிகழ்கிறது!
இதுவோர் – கேடு கெட்ட விதி !.
தவிரவும்,
யாரையும் – சுட்ட
முடியாதுள்ளது!!
…………….
கடந்த – மழைக் காலத்தில்
நிலைமை – இன்னமும்
“மிகமோசம்..!”
கூரையை பிய்த்துக்கொண்டு
கொட்டியது மழை…
கூடவே காற்றும்,
சேர்ந்துகொண்டது ஆடியது…
பெருத்த துயரம்..
அயலில் – பல அடுக்குகள்
பிய்ந்து தொங்கின..
கதறல்களோடு சேர்த்து – அப்புறப்படுத்த வேண்டியிருந்தது!
உலகமெங்கிலும் – பருவங்கள்
பொய்த்துவிட்டன…?
திடீர் மழை,
வெள்ளப் பெருக்கு,
காட்டாறு,
கடல்ப்பெருக்கு,
தீ,
யுத்தங்கள்..
உயிர்கள்,சொத்துக்கள்,..!
இயற்கையை – சூனியத்தில்
ஆழ்த்திவிட – சிந்திப்பது எது?
இருளும் கரியுமா – எங்கும்
கிடக்கப்போகிறது?
எதனது குரல் – கடைசி
மணியாய் – ஒலிக்கும்?
என்றுதான் – இயற்கை
அழுகிறது…
முல்லைக் கமல்.
(14/12/2024)

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More