இலங்கைத் தீவுக்குள்
ஒரு தனித்தீவு
அதுவே மலையகத் தீவு
ஈழ மக்களின் பிரச்சினைக்கு
தீர்வு என்பது
காணப்படாததைப் போன்றே
மலையக மக்களின் பிரச்சினையும்
இன்று வரை
தீர்க்கப் படாமலே உள்ளது
நிரந்தர காணி இல்லை
நிரந்தர வீடு இல்லை
நிரந்தர வேலை இல்லை
இதை விட
சம்பள உயர்வு இல்லை
ஒருவர் இறந்தால்
அடக்கம் செய்ய ஒரு துண்டு
நிலம் இல்லை
தேயிலைக் கொழுந்து பறிக்கின்ற
தொழிலாளர்களுக்கு
இரண்டாயிரம் கொடுப்பதில்
என்ன பிரச்சினை?
பரம்பரை பரம்பரையாக
அடிமைப்பட்டு சாவதையே தான்
இந்த ஆளும் அரசும்
முதலாளி வர்க்கங்களும் சேர்ந்து
வேடிக்கை பார்க்கிறதா?
ஈழ மக்களைப் போன்றே
மலையக மக்களையும்
பிரித்துப் பார்க்கிறா
நாட்டை ஆளும் அரசு?
வட்டக்கச்சி
எஸ்.பி.லக்குணா சுஜய்