தைப்பொங்கல் வாழ்த்து சொல்வோம்.
இனிய தைப்பொங்கல் வாழ்த்து.
பொங்கல் வைத்து
மகிழ்ந்து சொல்வோம்
நன்றிதனை சூரியனுக்கு.
செய்நன்றி பாராட்டி.
விதைத்து வந்த – நமது
அறுவடை தந்த
செல்வம் எல்லாம் – இப்போது
உம்மால் என்று.
அடுத்த போகம்
போவோம் விதைக்க.
கூட வந்து நீங்கள்
துணை நிற்க வேண்டும்.
காற்றைக் கூட
ஆக்கி தந்த
மழை மேகம் அதை
கூட்ட வந்திடும் சாமி.
மழைக்கு நீர்வட்டம்
தன் சுழற்சிக்கு கூடவே
துணை நிற்க வேண்டும்
கதிர்கரம் நீட்டி தான்.
புவி சுழலும் இங்கே
சூரியனை சுற்றி.
நம் வாழ்வு ஆகும்
அந்த கடவுள் பார்வையால்.
இனிய தைத்திருநாள் வாழ்த்துகள்.
நதுநசி