பைந்தமிழ் கண்டு
பரிதவித்து போனேன்.
பார் எல்லாம் இருக்கு
பைந்தமிழ் பிழைத்து.
வேற்று மொழி கலந்து
தாராளமாக உரைத்து
அதை பெருமையென
தமிழ் பிறந்தோர் சொல்ல.
நெஞ்சம் வெடித்து
இதயம் துப்பிய
உடலாக ஒரு நொடி
இறந்தது போல் இருந்தது.
ஈழப் போரில் கூட
மொழி வாழ வாழ்ந்தவர்.
தம்முயிர் துறந்தங்கே
பெரும் போர் செய்தார்.
இன்றென்னவோ பாரில்
அவரில்லை கண்டேன்.
பைந்தமிழும் பழுதாகிட
அதை தடுத்திட வருவாரோ?
பிள்ளைக்கு இட்ட
பெயரும் தமிழில்லை.
கேட்ட போது சொன்னார்
தமிழில் குறையொன்று.
தீரக் கற்று விடாத
அவரிடம் கண்டேன்
நானும் பெரும் குறை.
தமிழில் உண்டு அழகியல்.
தமிழ் அறிவியல்
கண்டல்லோ வந்தார்.
நம்மை எண்ணி அவர்
வியந்து நின்றார்.
அந்த அந்நியரும் தான்.
பிறகெதற்கு நாமிங்கே
அடிபணிந்து போனோம்.
கோழைக்கும் சோம்பறிக்கும்
வேற்றுமை தெரியாத படி.
தன்மானத்தோடு தமிழில்
தரணியெங்கும் நடை போட்டு
போகலாம் மடையவர் நமக்கு
மகிழ்ந்து பரவி படைத்திட.
அந்தளவுக்கு இருக்கிறது
நம்மிடம் ஆற்றல்.
அறிந்திட முதலில் நாம்
பிள்ளைக்கு வைப்போம்.
பெயர் சொன்னால்
பைந்தமிழும் பரவசமாக
அறிவியல் மேம்பட்டு போக.
விண்ணவன் எடுத்துக்காட்டு.
இனி வரலாம் இங்கே
நான் சொன்ன மாற்றம்.
இல்லை என்றால் இங்கே
நானதை ஆக்கிடலாம் பாரும்.
நதுநசி