செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் முள்வேலி | சிறுகதை | கேசுதன்

முள்வேலி | சிறுகதை | கேசுதன்

5 minutes read

 

பல களத்தினை பார்த்தவன் சேரன். விடுதலை புலிகளின் தலைமை பொறுப்புக்களில் கடமையாற்றி சிறப்பு தேர்ச்சி பெற்றவன். 18 வயதில் இன விடுதலைக்காய் கையில் துப்பாக்கி ஏந்த துணிந்தான். தலைவனின் வழிகாட்டுதலில் படிப்பனில் கவனம் செலுத்தி பல்கலைகழகம் முடித்து வெளியேறினான். பின்னர் இன விடுதலைக்காய் பல களங்களை முன்னெடுத்தான். பின்னர் காலம் செல்ல செல்ல சேரனின் தாய் தந்தை திருமணத்திற்கு பெண் பார்க்க தொடங்கினர்.

“எனக்கு இப்பொழுது கலியாணம் வேண்டாம் ஒண்டும் வேண்டாம் “தம்பி சொல்வதை கேள்” என்று கூற மறுப்பு தெரிவிக்க முடியாமல் சரி என்று கூறி பேசாமல் இருங்கோ” என்று கூறிவிட்டு சேரன் கோபமாக செல்ல அவனது அப்பா விட்டு இடத்தை விட்டு நகர்ந்தான்.

அவன் காரியாலயம் சென்றவுடன் மனக்குழப்பத்துடன் காணப்பட்டதை தட்டச்சு பதிவாளர் முகிலன் அண்ணா கண்டு கொண்டார். “என்ன சேரன் முகம் வாடியிருக்கு” என்று கேட்க நடந்ததை கூறினான். “டேய் என்னடாப்பா இதுக்கு போய் சோகம் இருக்க சந்தோசமா இருக்க வேண்டிய நேரத்தில இப்பிடி இருக்க” என்று கூற “இல்லை அண்ணா நான் கலியாணம் பண்ணினால் என்னை களத்துக்கு அனுப்ப மாட்டினம் இதுவே இவேலுக்கு நல்ல சாட்டா போயிடும்” என கனகணத்த குரலில் கூறினான்.

“டேய் சேரா அப்பிடி ஆர் சொன்னது அப்பிடி ஒண்டும் இல்லை களத்துல இருக்கிற பாதி பெடியள் கலியாணம் கட்டி போட்டுதான் நிக்கிறானுகள்” என்று கூற. அவனுக்குள் ஒரு அமைதி தோன்றியது. எல்லாம் அவன் அப்பா அம்மா நினைத்த படி அண்ணன் மேல் ஆணையிட்டு மனைவி தாமரையை கரம் பிடித்தான். அவளும் நன்கு படித்த அமைதியான மிகவும் அழகான பெண். “என்ன சேரா வெட்கபடுற போல” என்று முகிலன் அண்ணா கூற “சும்மா போங்க அண்ணா” என்று சேரன் தலைகுனிந்தான்.

சிறிது காலத்தின் பின்னர் சேரன் களத்திற்கு சென்று விட்டான். சிறிது காலத்தின் பின்னர் காரியாலயத்தில் இருந்து களத்திற்கு கடிதம் வந்தது. களத்தில் இருந்தது திரும்புமாறு சேரனுக்கு அழைப்பு விடுத்திருந்தது. செய்வதறியாது உடனே சென்ற சேரன் “ஏன் என்னை அழைத்தீர்கள்” என்று வினவினான். “உனக்கு விடுமுறை வீடு சென்றுவா” என்று கட்டளையிட்ட பொறுப்பாளரை மேலும் கீழுமாய் பார்த்தவன் அவரின் புன்சிரிப்பின் அர்த்தத்தை புரிந்து கொள்ளவில்லை. தமிழீழ போக்குவரத்து கழக பஸ்ஸில் ஏறியவன் சொந்தஊரான முரசுமோட்டைக்கு வந்து சேர்ந்தான்.

பாதை வழியே வீட்டிற்கு நடந்தவன் பல கேள்விகள் அவனது மனதில் அலை பாயத்தொடங்கியது. ஏன் திடீர் என்று அழைத்தார்கள்? ஏன் விடுமுறை? பொறுப்பாளர் ஏன் என்னை பார்த்து சிரித்தார் வீட்டில் இருந்து ஒரு தகவலும் ஏன் வரவில்லை? என் யோசித்துக்கொண்டே படலையை திறந்தவனுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அவனுக்கு ஆண் குழந்தை கிடைத்திருந்தது. ஓடி போய் மனைவியை கொஞ்சிவிட்டு குழந்தையை அணைத்தவன் புதிதாய் பிறந்தவன் போல் உணர்ந்தான். குழந்தைக்கு பேர் வைக்க வேண்டும் என்று நினைத்து பல புத்தகங்களையும் இரவினில் தூக்கத்தில் பெயர்களையும் உச்சரித்தபடி இருந்தான்.

“இஞ்சேருங்கோ தாமரை இங்க ஒருக்கா வாங்கோ” என்று அழைத்தவன் மனைவியிடம் பிள்ளைக்கு நல்ல அழகான தமிழ் பெயர் வைப்பம் என்று கூறினான். “நீங்கள் யோசிச்சி வச்சிருக்கீங்களோ இருந்தால் சொல்லுங்கோ மாமா மாமிட கேப்பம் கேட்டிட்டு அதையே வைப்பம்”. என்று தாமரை கூற “ஓமப்பா நான் நல்ல பெயர் ஒண்டு தேடி வச்சிருக்கன்”. “என்ன பெயர்” என்று மனைவி கேட்க “கலைவாணன் எப்படி பெயர்”. “ஓமப்பா நல்ல பெயராகிடக்கு மாமா மாமிட சொல்லி போட்டு வாறன்” என்று வீட்டிற்குள் நுழைந்தாள். சேரனின் அம்மா அப்பா வெளியே வந்து “சரி நாலு பெரும் நாளைக்கு முறிகண்டி பிள்ளையார் கோவிலுக்கு போயிற்று வருவம் நல்ல பெயர் அமைஞ்சிட்டு வச்சிப்போட்டு வருவம்” என்று அவனுடைய அப்பா கூற காலையில் அனைவரும் புறப்பட்டனர்.

காலங்கள் கடந்து செல்லச்செல்ல கலைவாணன் முதலாம் ஆண்டு பள்ளியில் சேர்ந்தான். அவன் வளர வளர நாட்டில் பிரச்சனைகளும் வலுப்பெற்றது. சேரன் களத்தில் இணைந்து முழுமூச்சாய் பாடுபட்டான். காலங்கள் கடந்து செல்லச்செல்ல தாமரை சேரனுக்கு கடிதம் எழுத்தினாள். “நாங்கள் இடம்பெயர்ந்து புதுக்குடியிருப்பு அம்மா வீட்டிற்கு மாமா மாமியை கூட்டிக்கொண்டு செல்கின்றேன். கவனமாக இருக்கவும். விரைவாக வீட்டிற்கு வாருங்கள்”. என எழுதப்பட்டிருந்தது. விடுதலை புலிகளின் களங்கள் பின்னோக்கி நகர்ந்த வண்ணம் இருந்தது. கலைவாணன் “அப்பா எப்ப வருவேர் எப்ப வருவேர்” என்று மழலை மொழியில் சிணுங்கிய படி இருந்தான். தற்போது உள்ள சூழ்நிலையில் கடிதம் போட்டாலும் கிடைக்காது என உணர்ந்தவள் வாசலை வெறிச்சபடி பார்த்தவண்ணம் இருந்தாள்.

நாட்கள் கழிய கழிய போராட்டம் திசைமாறி சென்றது. புதுக்குடியிருப்பில் இருக்க முடியாது என்று தோன்றவே அனைவரும் முள்ளிவாய்க்காலில் தஞ்சமடைந்தனர். சேரனின் வரவுகாய் காத்திருந்த தாமரை மக்கள் கூடாரங்களுக்கு நடுவே எட்டி எட்டி பார்த்தபடி குண்டுகளுக்கு சன்னங்களுக்கும் விலகியபடி தேடினாள். யாரோ ஒருவர் தாமரையின் தூரத்து சொந்தமாம் என கூறி தாமரை இருந்த குறிப்பை கூறி வழியனுப்பி வைத்தான். கூடாரங்களின் இடை நடுவே சேரன் வருவதை அவதானித்த தாமரை கைகளை அசைத்து அவனை கூப்பிட இராணுவத்தின் செல் மக்களின் கூடாரத்தில் பட்டு வெடித்தது. அந்த புகை மண்டலத்தில் இருந்து பல அவல குரல்கள் மேவியது தாமரையை புகை மண்டலத்தில் தேடியவன் அவளது கைகள் துண்டாடப்பட்தை பார்த்து பதைத்து அங்குமிங்கும் தேடி ஓடி பக்கத்தில் அப்பாவின் சாரத்தினை இரண்டாக கிழித்து அவளது கையில் கட்டினான்.

கலைவாணன் வீறிட்டு கத்திக்கொண்டிருக்க சேரனின் தாய் தந்தை மாமன் மாமியார் ஒரு பக்கம் குளறிய படி இருந்தனர். இராணுவம் மக்களின் கூடாரத்துக்குள் நுழைந்துவிட்டது. அனைத்து மக்களும் ராணுவத்தினரிடம் சரணடைந்தனர். சேரன் தன் மனைவியை தோளில் தூக்கி போட்டு கலைவாணனை அம்மாவிடம் தூக்கச்சொல்லி விட்டு அனைவரும் ராணுவத்திடம் சரணடைந்தனர். அவன் பேசிய சிங்களம் புரியவில்லை. தோலில் தாமரையை தூக்கி போட்டுகொண்டு ஒவ்வொரு இராணுவ சிப்பாய்களிடமும் காலில் விழுந்து கதறினான். “எண்ட மனைவிய காப்பாத்துங்க சேர். கை துண்டாக்கிட்டு எப்பிடியாவது காப்பாத்துங்க”என்று கூற ராணுவ அதிகாரி எதோ கூறி விட்டு தலையில் துப்பாக்கியால் அடித்தான். அதை கண்ட அவனது குடும்பம் அவன் காலில் விழுந்து “என்ட பிள்ளைய அடிக்காதிங்கோ”என்று கதறியது. ஒரு பக்கம் அரை உயிரில் இருந்தவரை சுட்டுக்கொன்றுகொண்டிருந்தது. இதை பார்த்த சேரன் தாமரையை தூக்கிக்கொண்டு காயப்பட்டவர்களை ஏற்றிக்கொண்டிருந்தது இராணுவத்தினரின் அம்புலன்ஸ் வாகனம் அதில் ஏற்றி விட்டு வவுனியா ஆஸ்பத்திரிக்கு செல்கிறோம். என கூறி விட்டு சென்றனர்.

அவளை தனியாக விடும் பயத்தில் அவளது அம்மாவினை துணைக்கு அனுப்பினான். அன்று விசேட பஸ் சேவை வற்றாப்பளை அம்மன் கோவில் முன்பாக வரிசை கட்டி நின்றது.ஒவ்வொரு குடும்பங்களாக முண்டியடித்து ஏறினர். கலைவாணனை கையில் அணைத்தபடி எல்லோரும் ஏறினார். எங்கு கூடிச்செல்கிறார்கள் என்று புரியாமல் அனைத்து மக்களும் விழிகள் பிதுங்கியபடி பயணத்தை தொடர்ந்தனர். போகும் வழிகளில் எல்லாம் பானைகள் எல்லாம் பொங்கல் வழிந்தபடி பட்டாசுகளின் சத்தம் துப்பாக்கி சத்தத்தை விட பயங்கரமாக வெடித்தது வீதியின் இருமருங்கிலும் சிங்கள தேசிய கொடி பறந்தது . சிங்கள மக்கள் அனைவரும் பால் பொங்கல்களை பரிமாறியபடி இருந்தனர். மனதில் இதே நிலைமை உங்களுக்கும் ஒரு காலம் வரும் என்று நினைத்தபடி பயணம் தொடர்ந்தவண்ணம் இருந்தது. பேருந்து முள்வேலி அடைக்கப்பட்ட பரந்த நிலப்பரப்பில் கூடாரங்கள் பொருத்தப்பட்டிருந்தன. ஒவ்வொரு குடும்பங்களையும் ஒவ்வொரு கூடாரத்தில் பிரித்தனுப்பப்பட்டனர்.

துப்பாக்கிகளை தாங்கிய சிப்பாய்கள் கூட்டம் கூட்டமாக நின்றனர். கலைவாணனை தூக்கி கூடாரத்துக்குள் நுழைய ராணுவ தளபதி ஒருவன் சேரனின் கைகளை பிடிக்க அவனை சுற்றி ராணுவ சிப்பாய்கள் துப்பாக்கியை நீட்டினர். சிங்களத்தில் எதோ கூற அதில் தமிழ் தெரிந்த சிப்பாய் ஒருவன் சேரன் துப்பாக்கியோடு வரி ஆடை அணிந்து நின்ற புகைப்படத்தை காட்ட செய்வதறியாது திகைத்து நின்றான். விடுதலை புலி என உறுதிபடுத்த ஜீப் வாகனம் கூடாரம் காற்றில் பறக்கும் வேகத்தில் சேரன் பக்கத்தில் வந்து நின்றது. கைகளுக்கு விலங்கினை இட்டு அடித்து எழுத்துச்செல்ல கலைவாணன் வீறிட்டு “அப்பா……” என்று கத்தினான். சேரனின் தாய் “ஐயோ என்ட பிள்ளய எங்கடா கொண்டு போறியல்” என்று கத்த ஜீப் கண்ணிமைக்கும் நேரத்தில் பறந்தது. காலங்கள் கடந்து செல்ல செல்ல தாமரை ஒரு கையை இழந்தவண்ணம் தன் தாயுடன் மாமா மாமியாரின் கூடாரத்தை கண்டு பிடித்து வந்து சேர்ந்தாள்.

சேரனின் நிலைமையை அறிந்தவள் முள் வேலிக்குள் இருக்கும் பொலிஸ் நிலையத்தில் “கணவரை காணவில்லை நீங்கள் தான் கூடிச்சென்றீர்கள்” என்று கூற சிங்களத்தில் தகாத வார்த்தைகளில் கூற ஓரளவு அவளுக்கு விளங்கியது. வெளியில் வந்தவள் மரநிழலில் வயதான தாய் ஒருவர் அழைப்பதை அறிந்து சென்றவள். அவளும் தன மகனை இவர்களிடம் தொலைத்த கதையை கூறி அழுதாள். “நாளை பார்வையாளர் நேரமாம் இந்த முள்ளுக்கம்பி வேலியில் நின்றால் என்மகன் வருவானாம் பார்க்கலாம் என்று இவனுக்கள் தான் சொன்னவயள் நாளைக்கு வா பிள்ள உன்ட மனுசன் வருவான் என்ட பிள்ளையும் வருவான்” என்று அந்த தாய் கூறியது தெய்வம் கூறியது போல எண்ணி மறுநாள் சேரனை பார்க்க கலைவாணனை கூடிக்கொன்டு முள்வேலி பக்கம் சென்றாள். பார்வையாளர்கள் வந்தவண்ணம் இருக்க கம்பி வேலிக்குள் தலையை திணித்தபடி சேரனின் வருகைக்காக காத்திருக்கிறாள் தாமரை.

பார்வை நேரம் முடிவடைய ராணுவ சிப்பாய் கம்பி வெளியில் நிற்பவர்களை திட்டித் துரத்தினான். சேரனின் வருகையை காணாது கம்பி வேலியில் கைகளை இறுக பற்றிய படி நிற்க கலைவாணன் அப்பா அப்பா என்று அழுத்த படி தாமரையின் கைகளை வருடிடினான். அப்பா வருவேரா அம்மா என்று கேட்க பதில் கூற முடியாமல் அவனை தூக்கி அணைத்துக்கொண்டாள். பார்வையாளர்கள் அனைவரும் அவ்விடம் இருந்து கலைந்து விட அவள் மட்டும் சேரனின் வருகையை எதிர்பார்த்தபடி அங்கேயே நின்றாள். காலங்கள் கடந்து செல்ல செல்ல கூடாரங்கள் அகற்றப்படவுமில்லை, முள்வேலி துண்டிக்கப்படவுமில்லை. கலைவாணன் காலம் செல்லச்செல்ல வளர ஆரம்பித்துவிட்டான். அவனின் மனதில் அப்பாவை அடித்து எழுத்துச்சென்றது ஆணி அறைந்தாற்போல் படிந்திருந்தது. தினமும் அப்பாவின் வருகைக்காக வேலிக்கரையின் ஓரம் தனக்கான ஓர் இடத்தை பிடித்துக்கொண்டான்.
கம்பி வேலி அவன் கண்ணீரால் துருப்பிடிக்கவும் தொடங்கியது. அப்பா உயிருடன் உள்ளாரா என்ற பீதி அவன் மனதில் ஊசலாடத்தொடங்கியது. வேலியில் கைகளை வைத்து கன்னங்களை புதைத்து என் அப்பா எங்குள்ளார் , எப்போது வருவார் என்ற ஏக்க கனவுகளுடன் காலங்களும் முள்வேலிக்குள் கடந்து செல்கிறது

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More