செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் யசோதா | ஹிந்திக் கவிதை | ரமாகாந்த் ரத்

யசோதா | ஹிந்திக் கவிதை | ரமாகாந்த் ரத்

1 minutes read

நான் உன்னை தாலாட்டுவேன்
எனது நெஞ்சின் முள் காட்டில்…
தண்டனை தருவேன்
உனது அலைகிற கூந்தலுக்கு
பாலைவனக் காற்றால்
அணிவிப்பேன் உனக்கு…
சமுத்ரமும்
ஒட்டுமொத்த ஆகாசமும்…
மற்றும் விளையாடுவதற்காக தருவேன்
உனக்கு நாடு கடத்தப்பட்ட
மக்களின் சுவாசம்
நீயும் நானும் போவோம்
அந்த ஆரோக்ய _வாழ்விடத்திற்கு
எங்கே குழந்தைகள்
காலி மருத்துவமனையின் அறைக்குள்
விளையாடிக் கொண்டிருக்கலாம்
எங்கே என்னுடைய அதிர்ஷ்ட பழம் தனித்து இருக்கலாம்
மற்றும் உன்னுடைய அதிர்ஷ்டம் ஒவ்வொரு நாளும்
என்னுடைய முந்தானையால்
மூடி இருக்கலாம்
இங்கே உன்னுடைய தேடல்
போய்க் கொண்டிருக்கிறது
கண்ணீர் மற்றும் கண்ணீர்
மேலும்
இணைப்பின் மூடுபனிக்கு நடுவே
மற்றும்
நீ ஏதாவது அலையின் மேலே
அமர்ந்து கொண்டாட்டமாய்
சிரித்துக் கொண்டிருக்கிறாய்
எவராவது இதை பார்த்துக் கொண்டிருக்கவில்லை இங்கே
அழுது _ அழுது என்னுடைய முகம் வீங்கிப் போயிருக்கிறது
எல்லாருக்கும் மட்டும் காட்டுகிறது
பசுக்களின் திரும்புகிற கூட்டம்
அதற்கு பிறகு காலி இடம் மட்டும்
நான் நல்ல முறையில்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
உனக்கு உள்ளே கொழுந்துவிடுகிற ஜ்வாலையை
என்னுடைய பைத்தியக்காரதனத்தின் மிக அதிகமானது தான்
மனோரமான கனவுகள்
எல்லா இரவுகள், எல்லா பகல்கள் அப்படித்தான் ஆகிக் கொண்டிருக்கிறது
ஆனால் நீ ஒரு பரத்வாஜ் பறவையாகி அமர்ந்து இருக்கிறாய்
ஏதாவதொரு மைதான மரத்தின் கிளையின் மீது
உன்னுடைய கோடி _ கோடி ரூபங்கள் இருக்கின்றன
ஒன்றிலிருந்து அதிமாகி ஒரு அழகு
இங்கே எந்த வழி இல்லை
இருந்தும் நான் இங்கே எப்படி வந்தேன்?
இங்கே படைப்பின்
எல்லா மக்கள்
எல்லா மிருகங்கள் _ பறவைகள்
எனக்கும் உனக்கும் உள்ளே
பார்த்து _ பார்த்து
எல்லா நதிகள், மரங்கள்
மற்றும் மலைகள்
பரிணமித்து போகின்றன
ஒரு நதி மட்டும்,
மரங்கள் மற்றும் மலைகளில்
நான் அந்த மரத்தின் நிழல் கீழே ஓய்வெடுக்கிறேன்
உன்னை எனது நனைந்த நெஞ்சோடு அணைத்து
உனக்காக பாடல் பாடுகிறேன்
ஆனால் தகவல் தெரியாமல்
போய்க் கொண்டிருக்கிறது
அந்த பாடல்கள் கேட்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன
என்னுடைய குரலில் அல்லது என்னுடைய புத்ரனின் குரலில்.

ஹிந்தியில் : ரமாகாந்த் ரத்
தமிழில் : வசந்ததீபன்

ரமாகாந்த் ரத். இவர் கட்டாக் (ஒரிசா) எனும் நகரில் 13 , டிசம்பர் 1934 ல் பிறந்தார். தனது முதுகலை (இலக்கியம்) கல்வியை ராவண்ஷா கல்லூரி (ஒரு) யில் படித்து விட்டு இந்திய ஆளுமைப் பணியில் 1957 ல் சேர்ந்து ஒரிசா அரசின் தலைமை செயலர் பதவியில் பணி செய்து ஓய்வு பெற்றார். மத்திய அரசில் பல முக்கிய பதவிகளை வகித்தார். 1977 ல் சாஹித்ய அகாதமி விருது பெற்றார். 1992 ல் சரஸ்வதி ஸம்மான் , 1990 ல் பிஸ்ஸூவா ஸம்மான் மற்றும் மூன்றாவது உயர் குடிமகன் மரியாதை பெற்றார். 2006 ல் பத்மபூஷன் விருது பெற்றார். 1993 முதல் 1998 வரை துணைத் தலைவராகவும், 1998 முதல் 2003 வரை தலைவராகவும் சாஹித்ய அகாதமி _ புதுதில்லியில் பதவி வகித்தார். பிப்ரவரி 2009 ல் இவருக்கு சாஹித்ய அகாதமியின் ஃபெல்லோஷிப் மத்திய அகாதமியில் வழங்கப்பட்டு 5 வது ஒரியக் கவிஞராக கெளரவிக்கப்பட்டார். இவரது கவிதைகள் ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More