இல்லை குடியேற
எனக்கு தனியாக சுதந்திர தீவு
மறுபடியும் எனது கவிதையே ,
நீ சாதாரணமாக செல்
அந்த மனிதனுடன் விரலைப் பிடித்துக் கொண்டு,
ஒரு சிலரின் கலாச்சார ஏகபோகத்தை
நான் என் வாழ்நாள் முழுவதும் வெறுத்தேன் வெறுத்தேன்
சொந்த ஜனங்களை திரித்துவ அடர்த்தியை வலியுறுத்தி,
சாயம் பூசவில்லை
நான் வாழ்க்கையின் படத்திற்கு.
சாதாரண மனிதர்களோடு,
அவர்களின் சூழ்ச்சி விகாரங்களோடு அன்பு செய்து கொண்டு,
நான் விலங்குகளை,
பூச்சிகளை மற்றும் எறும்புகளையும் நேசித்துக்கு கொண்டு.
நான் அனுபவித்திருக்கிறேன்
அனைத்து தொற்று மற்றும் மறைந்த நோய்களையும்
ஏமாற்றம் தரும் பொது மதிப்பீட்டை
நான் இயல்பாகவே வைத்திருக்கிறேன் என்னுடைய கட்டுப்பாட்டில்.
உண்மை _ பொய்யின் போராட்டத்தில் இழக்கவில்லை நான்
சுயத்தை என் உள் குரலை,
என் உண்மையான நிறத்தை,
என் உண்மையான வார்த்தைகளை.
நான் வாழ்ந்தது நரம்புகளால் இல்லை ,
வேதனை உணர்வுகளால் கேன்வாஸின் மேல்
சாய வேலையாக இருக்கிறது.
என் கவிதையே,
நீ தான் உண்மையான, அழகான, சீரான புராணங்களின்
தெய்வீக பெண்களை விடவும்
அதிக அழகுள்ள வீனஸ் அல்லது ஜூனோவாக இருக்கிறாய்
டயானாவாக இருக்கிறாய் அல்லது மடோனாவாக…
நான் அவளின் தேகத்தின் மேலிருக்கும் பளபளக்கும் ஆடையை குறைத்திருக்கிறேன்.
எனது பிரிய கவிதையே , நான் ‘ஏகோல்-தி-போர்ஜாட்’ மாணவர் அல்ல
அனுபவப் பள்ளியில்படித்து நான் வாழ கற்றுக் கொண்டேன்,
கவிதை செய்வது : சி வெளியேற்ற
இது தவிர மற்றும் மனிதர்களைப் போலவும்
சிற்சில பூஜ்ஜிய உணர்வால்
வானத்தின் கீழ் அலைவது எனக்கு நல்லதாக இல்லை.
மேகங்களின் அழகான வடிவங்கள் வானத்தில் நகர்ந்து
முன்னே வந்து _ போவதைப் பார்க்கையில் நிறைவாகிறது என் அந்தரங்கம்
நான் புத்துணர்ச்சி பெறுகிறேன்,
கவனித்துக் கொள்கிறேன் சமகால வாழ்க்கையை சமூகமயமாக்க.
தமனிகள் வழியாக பாயும் இரத்தத்தின் பெரும் எழுச்சி,
படபடக்கும் தமனி மீது விரல் வைப்பது எனக்கு நல்லதாகிறது.
எந்த ரொட்டி என்னை நிரந்தரமாக துன்புறுத்தியது
அந்த ரொட்டி
என்னை தோற்கடிக்க முடியவில்லை,
நான் விளைவித்து இருக்கிறேன்
வாழ்வின் சிரத்தையை மற்றும்
எழுதி இருக்கிறேன் நான்
வாழ்வின் சுத்த _ தோல்வியற்ற மனித கண நிறைவை
என்னுடைய துக்கம் தவறுகள் _
மறந்திட கவிதையின் அப்படிப்பட்ட வரிகளை எழுதிடும் முயற்சிகள் செய்தேன்
நான் எப்பொழுதும் .
உலகியலின் விரலைப் பிடித்துக் கொண்டு, நான் சைதன்யாவிடம் சென்றேன்,
ஆனால் அங்கு மன ஈடுபாடு ஏற்படவில்லை எனக்கு ,
அதன் விரலைப் பிடித்து
நான் மீண்டும் உலகியலின் பக்கமே வந்தேன், நிலையான _
நிலையற்றதிற்கு நடுவில் நிலைத்த வெளியே உள்ள கோடுகளின் அனுபவம்
நான் உருவாக்கிட இருக்கிறது,
நான் அனுபவித்திருக்கிற எதிரே பிரமாண்ட என்னுடைய கவிதை ,
சொல் இதை விட அதிகமாக என்ன ஆக முடியும் ஒரு கவிஞனின் நடத்தை ?
ஹே.. எனது பிரிய கவிதையே
இல்லை குடியேற
எனக்கு தனியாக ஒரு தீவு ,
நீ சென்றபடி இரு சாமான்யத்திலிருந்து
சாமான்ய மனிதரின் விரலைப் பிடித்துக் கொண்டு.
ஏய் எனது பிரிய கவிதையே
எங்கே இருந்து நான் யாத்திரை ஆரம்பித்து இருந்தேன்
மீண்டும் அங்கேயே வந்து நிற்பதை விரும்பவில்லை ,
நான் தவிர்க்க விரும்புகிறேன்
எனது புராதான அடிவானத்தை.
🦀
மராத்தியில் : நாம் தேவ் தஸால் ஹிந்தியில் : சூர்ய நாரயண ரண சூபே தமிழில் : வசந்ததீபன்
🦀
நாம் தேவ் தஸால்
________________________
பிறப்பு : 15 பிப்ரவரி 1949
__________
இறப்பு : 15 ஜனவரி 2014
__________
பிறந்த இடம் :
________________
பூனாவுக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் , மஹாராஷ்டிரா மாநிலம்.
படைப்புகள் :
__________________
(1) கோல் பீட்டா (1972)
(2) மூர்க்கம் ஹாதாத் யானே டோங்கர் ஹல்வலே (1975)
(3) ஆமச்யா இதிஹாஸாதீல் ஐக் அபரிஹார்ய பாத்ர: பிரியதர்ஷிணி (1976)
(4) துஹீ யத்தா காஞ்சீபுரம் (1981)
(5) க்கேல் 1983)
(6) காண்டூர் பஹீச்சா (1986)
(7) யா ஸத்தேத் ஜீவ் ரமத் நாஹீ (1995)
(8) மீ மார்லே சூர்யாச்யா ரத்தா சே
க்கோடே ஸாத் , துஜே போட் த்தருன்
சால்லோ ஆஹே.
ஆக மொத்தம் 11 கவிதைத் தொகுப்புகள்.
மற்றவை :
______________
(1) தலித் பைந்த்தர் ஆந்தோலன் கே ஸம்ஸ்த்தாபக் (1972)
(2) புத்த் ரோஹிதாஸ் விசார்ட்ஸ் கெளரவ் புரஸ்கார் (2009)
(3) ஸாஹித்ய ஜீவன் கெளரவ் புரஸ்கார் (2004) மற்றும் பத்மஸ்ரீ புரஸ்கார்.
இவர் கவிதையைக் தவிர நாடகமும் , நாவலும் எழுதியுள்ளார்.