ஈழத்தில் 1980 முதல் 1987வரை வெளிவந்த ‘புதுசு’ சஞ்சிகையின் அனைத்து இதழ்களையும் உள்ளடக்கி மீள்பதிப்பாக நூலுருவில் வெளிவருகின்றது. இதன் வெளியீடு விழா எதிர்வரும் சனிக்கிழமை 10/03/2018 அன்று மாலை 6 மணிக்கு தெற்கு லண்டன் லூயிஸியம் சிவன் கோவில் மண்டபத்தில் நடைபெறுகின்றது.
இரவி அருணாசலம், பா பாலசூரியன், இளவாலை விஜயேந்திரன், நா சபேசன் ஆகியோர் இணைந்து தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் கல்வி கற்றபோது புதுசு சஞ்சிகையை நடாத்தியிருந்தனர். ஈழ விடுதைப்போராட்டம் முகில் விட்டு வீரியம் கொள்ளத்தொடங்கிய காலப்பகுதியில் ஈழ இலக்கியத்துக்கு களம் அமைத்த சிற்றிதழ் என்ற முக்கியத்துவத்தை புதுசு சஞ்சிகை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.