ஈழத்துப் பெண் எழுத்தாளர் தாமரைச்செல்வியின் 37 சிறுகதைகளைக்கொண்ட “வன்னியாச்சி” நூல் இலண்டனில் அறிமுகம் செய்யப்பட்டதுடன் அக்கதைகளைப் பேசுகின்ற நீண்ட இலக்கிய கருத்தாடல் நிகழ்வும் இலண்டனில் நேற்று நடைபெற்றது.
திருமதி சந்திரா இரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நவஜோதி யோகரட்ணம், இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம், ச. வேலு மற்றும் நெதர்லாந்திலிருந்து வருகை தந்த சார்ள்ஸ் குணநாயகம்ஆகியோர் விமர்சன உரையை வழங்கியிருந்தனர்.
இலக்கிய ஆர்வலர்கள் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டதுடன் கருத்துப்பரிமாற்றத்திலும் கலந்துகொண்டு தமது கருத்துக்களையும் தெரிவித்தனர்.
இலண்டன் நகரில் ஒரு ஞாயிறு மாலை, மழைத்தூறல் ஆங்காங்கே விழ ஒரு இலக்கிய நிகழ்வு. வன்னி மண்ணின் வாழ்வை கதைகளாகக்கொண்ட ஒரு நூல். பேச்சாளர்களும் கருத்தாளர்களும் கதைகளூடே மீண்டும் அந்த வன்னிக்கு அழைத்துச் சென்றது போன்ற பிரமை.