செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் தீபச்செல்வனின் நடுகல் கனடாவில் அறிமுகமாகிறது | விமர்சனங்களை உடைத்து அடுத்த நடை

தீபச்செல்வனின் நடுகல் கனடாவில் அறிமுகமாகிறது | விமர்சனங்களை உடைத்து அடுத்த நடை

1 minutes read

 

 

கனடா, டொரன்ரோவில் நடுகல் நாவல் அறிமுகம் எதிர்வரும் ஞாயிறு 26 ஆம் திகதி நடைபெறுகின்றது. ஈழத்து இளம் எழுத்தாளரின் நூல் ஒன்று  உலகின்  பல்வேறு நாடுகளில் தொடர்ந்து கவனம் பெற்று வருவது அண்மையில் நடந்துவரும் அதிசயம்.

ஈழத்திலிருந்து வரும் மிகமுக்கியமான படைப்பு இது. ஈழப்போரின் வாழ்வில் முழுமையாக வாழ்ந்தவர். எழுத்தின் நுகர் முகத்தை ஈழத்தின் எழுற்சிக்காலங்களில் சிறு வயதில் கரம்பிடித்து நடை பயின்றவர். இன்றும் அதே பிரதேசத்தில் அதே மக்களுடன் வாழும் தீபச்செல்வன் சொல்லும் கதை என்ன ? இந்த நாவலினூடே அவர் சொல்லும் செய்தி என்ன ? அதை அறிய கனடா மண்ணில் மீண்டும் ஒரு களம் அமைகின்றது.

மண்ணிலிருந்து மண்வலியையும் மண்சார் அக்கறையையும் சொல்வதென்பது அவ்வளவு சுலபமல்ல. அதற்கு ஒரு திமிர் வேண்டும். அதற்கு ஒரு மண்சார் தீராக்காதல் வேண்டும். அது தீபச்செல்வனிடம் நிறைவே உண்டு என இந்த நிகழ்வின் ஏற்டபாடு தொடர்பாக குறிப்பிடுகின்றார் ஐங்கரன்.

ஏலவே இலண்டனில் இவரது நடுகல் நாவல் அறிமுகமானபோது. எழுத்தையும் விமர்சனத்தையும் தொழிலாக கொண்ட சிரேஷ்ட இலக்கியவாதிகளால்  சிறுமைப்படுத்தும் விமர்சனங்கள் முன்வைத்தபோது ஈழத்து இலக்கிய உலகில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

வன்னியில் வாழ்ந்துவரும் ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் வாழ்த்துக்களையும் விமர்சனங்களையும் உள்வாங்கி வளர்ந்து வர வணக்கம் இலண்டனும் வாழ்த்துகின்றது.

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More