ஈழத்தின் மூத்த இலக்கிய ஆளுமைகளில் ஒருவரான,எழுத்தாளர் நீர்வை பொன்னையன் நேற்று(26) காலமானார்.
யாழ்ப்பாணத்தின் நீர்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் தனது ஆரம்ப,இடைநிலைக் கல்வியைத் தொடர்ந்து இந்தியாவின் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பி.ஏ பட்டத்தையும் பெற்றவர்.
இடதுசாரிக் கொள்கைகளை தனது எழுத்துக்களில் புகுவிக்கும் இவர் கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் ஈழத்தின் இலக்கியப் பரப்பில் கவிதை,கதை,சிறுகதை,நாட்டார் கதை,இலக்கியக் கட்டுரைகள் எனப் பல படைப்புக்களை அழித்தவர்.
இவரது மேடும் பள்ளமும்(1961),உதயம்(1976),மூவர் கதைகள்(1971) போன்ற பல படைப்புகளை இவரின் ஆளுமைக்கு உதாரணமாக கூறலாம்.