“எத்தனை நாளாய் காத்திருந்தோம்…” என்ற பாடல் மூலம், நிலம் திரும்பும் கனவுகளுடன் வாழும் அகதியின் வலியை பாடியுள்ளார் கலாநிதி என். சண்முகலிங்கன்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் இலங்கையின் புகழ்பெற்ற சமூகவியல் பேராசிரியருமான கலாநிதி என் சண்முகலிங்கன், கவிஞர், இசைக்கலைஞர், பாடகர் என பன்முகங்களை கொண்டவர்.
முப்பது ஆண்டுகளாய் ஈழப் பாடல்கள் பலவற்றை எழுதி ஈழ மெல்லிசைததுறைக்கு பெரும் பங்களித்துள்ள இவர் அண்மையில் 30 ஆண்டு இடம் பெயர் அலைவுகளின் பின் நிலம் திரும்பிய வலி வடக்கு வயாவிளான் கிராமத்தில் உள்ள வரப்புலம் தான்தோன்றி விநாயகர் ஆலய பொங்கல் நிகழ்வை முன்னிட்டு பாடல் ஒன்றை எழுதி பாடியுள்ளார்.
நிலம் திரும்ப ஏங்கும் அகதிகளின் மன வலியையும் கனவுகளையும் பேசும் இந்தப் பாடல், ஈழ மற்றும் உலகத் தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஈழ இசையமைப்பாளர் அற்புதன் இந்தப் பாடலுக்கு இசையமைத்துள்ளார்.
பாடல் இணைப்பு