செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் தமிழ் சங்கின் கலை இலக்கிய விருது விழா

தமிழ் சங்கின் கலை இலக்கிய விருது விழா

3 minutes read

பூவரசி ,Arc நிறுவனங்கள் இணைந்து நடாத்தும் தமிழ் சங்கின் கலை இலக்கிய விருது விழா எதிர்வரும் 12.11.2022 சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள கிறீன் க்றாஸ் மண்டபத்தில் இடம்பெற உள்ளது. இந் நிகழ்வு தமிழ் சங்கு ஆண்டு விழாவினை மையப்படுத்தி உள்நாட்டு கலைஞர்களுக்கிடையில் போட்டிகள் நடாத்தப்பட்டு, பணப் பரிசில்களுக்காக தெரிவு செய்ய பட்டிருக்கிறார்கள்.

அத்துடன் கலை இலக்கிய விருதுகளுக்கும் திறமையாளர்கள் தெரிவு செய்யப்பட்டு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட உள்ளனர்.
குறிப்பாக வாழ்நாள் சாதனையாளர்களாக ஈழத்து இசைவாணன் ஆன கண்ணன் மாஸ்டர் அவர்களும் ஆய்வறிஞ்ஞரும்,
எழுத்தாளருமான அருணா செல்லத்துரை, எழுத்தாளர் மலர் அன்னை, பூபால சிங்கம் புத்தக சாலையும் பதிப்பாளருமான ஸ்ரீதரசிங் போன்றார் தெரிவு செய்ய பட்டுள்ளனர். நிகழ்வை idm கம்பஸ்
தலைவர் டாக்டர் வி.ஜனகன் அவர்கள் தலைமை தாங்குகிறார். இவர்களுக்கு விழாவில் பொற்கிழியும் வழங்கப்பட உள்ளது. பிரதம விருந்தினர்களாக யாழ் மாநகரசபை முதல்வர் மணிவண்ணன் அவர்களும் ,
லயன் சௌமா ராஜரட்ணம் அவர்களும். கௌரவ விருந்தினர்களாக யாழ் அரச அதிபர் திரு கணேசபிள்ளை மகேசன், புரவலர் காசிம் உமர் , Arc நிறுவன அதிபர் விஜிதரன் பொன்னுத்துரை போன்றோரும்,

சிறப்பு விருந்தினர்கள் வீரகேசரி ஆசிரியர் திரு ஶ்ரீகஜன், ஐகிய மக்கள் சக்தியின் பிரதி செயளாளர் திருமதி உமா சந்திரா பிரகாஷ், தினகரன் வார இதழ் பிரதம ஆசிரியர் திரு செந்தில் வேலவன், ஊடக ஆளுமை திரு மதன் வாசன், திரைப்பட இயக்குனர் ஈழவாணி போன்றோரும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

இவ்விழாவில் நடனம், நடிப்பு, இசை போன்ற கலை நிகழ்ச்சிகள் இடம் இடம்பெற உள்ளதோடு,

ஈழவாணி இயக்கிய மூக்குத்திபூ திரைப்படத்தின் முன்னோட்டமும் முதல்பார்வை சுவரொட்டியும் வெளியிடப் பட உள்ளது.

இந்நிகழ்வில் பல கலை இலக்கிய வாதிகள் கலைஞர்கள், திரை ஆளுமைகள் பங்கு பெற உள்ளார்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More